
தேசிய விளையாட்டுத் துறை கூட்டம்

தேசிய நிர்வாகத்தின் தலைவர் லியூ பொங்

பெய்சிங் மாநகரத் துணைத் தலைவர் லியூ ச்சிங்மின்
ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முடிவடைந்த நிலையில் 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மென்மேலும் நெருங்கி வருகின்றது. ஒரு முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை செவ்வனே நடத்த வேண்டுமானால், ஏற்பாட்டு பணிகளை சரிவர செய்வதோடு, போட்டிகளை நடத்தும் நாட்டின் விளையாட்டு வீரர்கள் சிறந்த சாதனை புரிவதும் இன்றியமையாததாகும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் தலைவர் சமராஞ்ச் பெய்சிங் மாநகராட்சித் தலைவர்களிடம் கூறினார். அவருடைய இக்கூற்று சீன விளையாட்டுத் துறையாளருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் நினைவூட்டி ஊக்கமளிப்பதாக உள்ளது.
2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தலைசிறந்த சாதனை புரியும் லட்சியத்தை, சீன விளையாட்டுத் வீரர்கள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத்தின் தலைவர் அண்மையில் தெரிவித்துள்ளார். 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பணிகள் அனைத்தும் 2005ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே துவங்கிவிட்டது.
2005ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் நாள் முதல் 4ஆம் நாள் வரை நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள விளையாட்டு பணியகத்தின் தலைவர்கள் கூட்டம் பெய்சிங்கில் நடைபெற்றது. அடுத்த 4 ஆண்டுகளில் சீன விளையாட்டுத் துறை பணிகள் பற்றி ஆய்வு செய்து, திட்டமிடுவதற்கான ஒரு முக்கிய கூட்டமாக இது விளங்குகின்றது. சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத்தின் தலைவர் லீயு பொங் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். 2008ஆம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நெருங்கிவருகின்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த சாதனைகளைப் புரிவது, அனைத்து சீன மக்களின் விருப்பமாகும். இது, சீன விளையாட்டுத் துறையினர் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பும் ஆகும். அத்துடன் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கான ஒரு முக்கிய காரணியுமாகும் என்று அவர் கூறினார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மகிழ்ச்சி தரும் சாதனைகளை புரிய எவ்வாறு பாடுபடுவது பற்றி சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத்தின் தலைவர் கோ ச்சியன் ச்சுன் கூறியதாவது. சிறந்த சாதனை புரிய வேண்டுமானால், நாங்கள் மிக கடுமையான போட்டியை எதிர்நோக்குகின்றோம். மேசை பந்து, பூப்பந்து, நீர் குதிப்பு, பளுதூக்கல் உள்ளிட்ட சில பாரம்பரிய விளையாட்டுப் பிரிவுகளில் நாங்கள் ஏற்கனவே போதிய அளவு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளோம். இந்த விளையாட்டுக்களில் மேலும் அதிக தங்கப் பதக்கங்களை பெறும் வாய்ப்பு அதிகம் இல்லை. எனவே, இதர விளையாட்டுக்களில் தங்கப் பதக்கங்களை நாங்கள் பெறக் கூடிய வாய்ப்பைக் கண்டறிய வேண்டும் என்றார்.
|