
தட களப் போட்டி, நீச்சல், நீர் பரப்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் மொத்தம் 119 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இந்த மூன்று விளையாட்டுகளில் சீன அணி பின்தங்கிய நிலையில் தான் இருந்துவருகின்றது. 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின் இந்த மூன்று நிகழ்ச்சிகளில் அதிக ஈடுபாடும், முதலீடும் செய்துள்ளதால், கடந்த ஆண்டு ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன விளையாட்டு வீரர்கள் 4 தங்கப் பதக்கங்களை பெற்றனர்.

புதிய சுற்று ஒலிம்பிக் விளையாட்டு காலகட்டத்தில் இந்த மூன்று அடிப்படை நிகழ்ச்சிகளிலும் மற்போர், தைகொங்தௌ, சைகிள் ஆகிய நிகழ்ச்சிகளிலும் உள்ளார்ந்த ஆற்றலை போதிய அளவில் தட்டியெழுப்பி, அவற்றை சீன விளையாட்டு வீரர்கள் தங்கப்பதக்கம் பெறும் புதிய தளமாக மாற்ற வேண்டும்.

கடந்த ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீன வீரர்களான யாங் வென் ச்சுன், மொங் குவான்லியாங் ஜோடி ரப்பர் படகு இரட்டையர் 500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றது. இது வரலாற்றில் காணாத சாதனையாகும். எனவே, நீர் பரப்பில் நடைபெறும் விளையாட்டுகளில் சீனப் பிரதிநிதிக் குழுவுக்கு தங்கப் பதக்கம் பெறும் ஆற்றல் உண்டு என்பது தெரிகின்றது என்று சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத்தின் நீர் பரப்பில் நடைபெறும் நிகழ்ச்சி நிர்வாக மையத்தின் தலைவர் வெய் தி கூறினார்.

புதிய விளையாட்டுக்களை வளர்க்கும் அதேவேளையில், தனது பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளை நிலைநிறுத்துவதிலும் சீன விளையாட்டுத் துறையினர் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். மேசை பந்து, பூப்பந்து ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளில் சீன விளையாட்டு வீரர்கள் எப்பொழுதும் உயர்ந்த நிலையிலேயே இருந்த போதிலும், மகளிர் இரட்டையர் போட்டி நிகழ்ச்சியில் தென் கொரிய வீராங்கனைகளின் அச்சுறுத்தலும், ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் தென் கொரிய மற்றும் ஐரோப்பிய வீரர்களின் அச்சுறுத்தலும் எப்பொழுதும் இருந்துவருகின்றன.

எனவே, அடுத்த 4 ஆண்டுகளில் சீன விளையாட்டு வீரர்கள், விளையாடும் முறையிலும் தந்திரத்திலும் புதிய நுட்பத்தை கண்டறிய வேண்டும் உருவாக்க வேண்டும். அதேவேளையில் இளைஞர்களை வளர்க்க வேண்டும், புதிய நுட்பத்தை இடைவிடாமல் உருவாக்குவதன் மூலம் இந்த இரண்டு விளையாட்டுகளில் சீனாவின் மேம்பாட்டை தொடர்ந்து நிலைநிறுத்துவோம் என்று மேசை பந்து மற்றும் பூப்பந்து நிர்வாக மையத்தின் தலைவர் சை சென் ஹுவா கூறினார்.
|