 மனிதன் நல்ல உடல் நலத்துடன் வாழ்வது தான் மகிழ்ச்சியான வாழ்க்கை. பிறப்பு முதல் இறப்பு வரை எண்ணற்ற நோய்கள் மனிதனை வருத்துகின்றன. எத்தனையோ மருந்துகளும் சிகிச்சைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிகிச்சை முறையை அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துகின்றார்.

கொடிய நோய்களுக்கு தன்டு செல் அடிப்படையில் சிகிச்சை
லுக்கேமியா எனப்படும் ரத்தப் புற்று நோயாலும் இதர கொடிய நோய்களாலும் அல்லல்படும் நோயாளிகளுக்கு நிவாரணம் தரும் வகையில் புதிய சிகிச்சை முறை ஒன்றை சீன அறிவியல் அறிஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
உடல் உறுப்புக்களுக்கு சிதைவு ஏற்படுவது அல்லது உடல் உறுப்புக்களின் திசுக்கள் சலிவர இயங்காமல் போவது போன்ற கொடிய நோய்கள் உண்டாகின்றன. இவற்றுக்கு வழக்கமான சிகிச்சை முறையில் மருந்துகள் தரப்படுகின்றன. மாற்று உடல் உறுப்பு பொருத்தப்படுகின்றது. இன்னும் பல சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. ஆனால் இவற்றினால் விரும்பிய பயன் ஏற்படவில்லை. நோயாளிகளுக்கு முழு அளவில் குணம் ஏற்பட வில்லை. ஆகவே நடுத் தண்டு செல்களினால் உருவாக்கப்பட்ட ஒரு ஊசி மருந்தைச் செலுத்தி குணப்படுத்துவது பற்றி சீன அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து ஒரு மருந்தை உருவாக்கியுள்ளனர். இந்த நடுத் தண்டு செல் சிகிச்சையினால் சேதமடைந்த அல்லது செயல்படாத திசு உறுப்புக்கள் செப்பம் செய்யப்படும். இது உடம்பை ஒரு செல் உலகம் என்று சொல்லாம். 200க்கும் அதிகமான செயற்கை வகை திசுக்களில் 10 லட்சம் பில்லியன் அதாவது 10 கோடி செல்கள் மனித உடம்பில் உள்ளன. இந்த செல்கள் பிளவு மூலம் பெருக்கும் சக்தி பெற்ற நடுத் தண்டு செல்களில் இருந்து உற்பத்தியாக் கூடியவை. ஆகவே இந்த அபாரமான ஆற்றல் பெற்ற நடுத் தண்டு செல்லைப் பயன்படுதி ஊசி மருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாக சீன மருத்துவ அறிவியல் அகாடமியின் பேராசிலியர் சோ சுன் குவா அண்மையில் பெய்சிங்கில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

எளிதில் பிறந்து விடக் கூடிய பல்வகைத்த திறன் பெற்ற நடுத் தண்டு செல்களை மனித உடம்பில் இருந்து எவ்வாறு எடுப்பது எடுத்த பிறகு வெளியே வைத்து எவ்வாறு மருந்து தயாரித்து புற்று நோய்க் கட்டிகளையும் இதர கொடிய நோய்களையும் குணப்படுத்துவது நடுத் தண்டு செல் ஆராய்ச்சியில் இந் கேள்விகள் அறிவியல் அறிஞர்களுக்கு பெரும் சிக்கலாக இருந்தன. சோ சன் குவா தலைமையிலான அறிவியல் அறிஞர்கள் குழு எலும்பு மஜ்ஜையில் இருந்து நடுத் தண்டு செல்களை பிரித்து விட்டன. இவ்வாறு பிரிக்கப்பட்ட செல் குறிப்பிட்ட உடம்புச் சூழலில் பல்வேறு திசு செல்களுடன் இணைக்கப்பட்டன. இது நோயாளிகளின் பழுதுபட்ட உடல் உறுப்புக் கூறுகள் சீரடையவும் புதுப்பிக்கப்படவும் உதவியது.

இநதப் புதிய மருந்தின் ஆய்வுக் கூட ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்து விட்டது. இப்போது மருந்துவமனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட மருத்துவமனை ஆராய்ச்சி 3 மாதங்களில் முடிந்து விடும். அது வெற்றி பெறுமானால் நடுத் தண்டு செல் சிகிச்சை முறையும் வெற்றி பெறும்.
|