• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-21 21:48:02    
நேயர் நேரம்62

cri
சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சீன வறுவல் நேயர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. சமைத்து ருசித்த பின்பு, அவர்கள் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

--உணவு அரங்கம் நிகழ்ச்சியில், வெண்ணிறக்காலாண் வறுவல் பற்றிக் கூறக் கேட்டேன். இந்த வறுவல் எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன். தமிழகத்தில், மழைக்காலம் தொடரும் நேரத்தில் இயற்கையாக வெண்ணிறக்காலாண் எங்களின் தோட்டங்களில் கிடைக்கும் என்கிறார் S.K.பாப்பாம்பாளையம் P.T.சுரேஷ்குமார்.

--இதில், புதுமையான முறையில் ஒரு இனிப்பான பழங்களைக் கொண்டு சத்தான உணவாக அது இடம்பெற்றுள்ளது. இது, அணைவருக்கும் ஏற்ற நல்ல வகையில் எல்லோருக்கும் உதவும் சூப் நல்ல மருந்தாகவும் உதவும் என 30 பள்ளிப்பட்டி ஏ.கம்பம் கூறினார்.

அடுத்து, எமது ஒலிபரப்பில் இடம்பெற்ற பிற நிகழ்ச்சிகள் பற்றிய நேயர்களின் பல்வேறு கருத்துக்கள் இதோ.

--கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் எங்களின் இந்த கேள்விக்கும் தாங்கள் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறோம். சீன வானொலி நேயர் மன்ற உறுப்பினராக இணைந்து பொது அறிவுப் போட்டியில் கலந்து கொண்டால், நேயர்களின் வினாத்தாள்களைத் தனித்தனியாக பார்க்காமல், நேயர் மனத்தின் அடிப்படியில் பார்த்து மன்றத்தில் தலைவர், செயலாளர் என பதில் வகிக்கும் என்று, கைத்தறி நகர் J.D.ஆனந்தன், கார்த்திக், மணிகண்டன், இந்திரா ஆகியோர் தெரிவித்தனர்.

--உங்கள் குரல் நிகழ்ச்சியில் பழைய நேயர்களின் கருத்தை வழங்கியது சிறப்பு. தற்போது சில காரணங்களால் கடிதம் எழுதாமல் இருக்கும் நமது பழைய நேயர்களை கடிதம் எழுத ஊக்குவிப்பதாக இருந்தது. ஒலிப்பதிவு செய்த விழுப்புரம் நேயர் மன்றத்தினருக்கு பாராட்டுக்கள் நன்றிகள் என்கிறார் மீனாட்சிபாளையம் கே.அருண்.

--விழுப்புரம் S.செல்வம் வழங்கிய நிகழ்ச்சியின் மூலம், துவக்க காலத்தில் மிக அதிகளவு கடிதம் எழுதும் மூத்த நேயர்களின் இனிய அனுபவங்களை இன்றைய இனைய தலைமுறை நேயர்கள் கேட்டு ரசித்தனர். நல்ல நிகழ்ச்சியாகவும் இந்த உங்கள் குரல் நிகழ்ச்சி அமைந்து உள்ளது என்கிறார், 30 பள்ளிப்பட்டி P.R.சுப்ரமணியன்.

--தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி தற்போது வித்தியாசமாக ஒலிபரப்பாகியது. ஒரு பாடத்தை விளக்கிய பிறகு அதை மீண்டும் அடுத்த நாள் நினைவு படுத்துவது சிறப்பாக உள்ளது. நீங்கள் நலமா, நான் மிகவும் நலம், இவ்வாறு தெளிவாக மனதில் நிற்கும் வகையில் நடத்துகிறது. இத்தகைய முயற்சியை பாராட்டுகிறேன் என்கிறார் ஆரணி, ஏ.புஷ்பராஜ்.

--நேயர் நேரம் நிகழ்ச்சியில், எங்கள் குரலை ஓங்கி ஒலித்து, மிகவும் கேட்டு ரசித்தேன். பல்வேறுபட்ட நேயர்களின் தரமான கடிதங்கள் வாசிக்கப்பட்டன. இதிலிருந்து நேயர்கள் தங்களின் கடிதத்தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். நேயர்களுக்கு நல்ல முக்கியத்துவம் அளிக்கிறீர்கள் என்கிறார் விழுந்தமாவடி, ஆர்.மகேந்திரன்.

--சீன சமூக வாழ்வு குறித்த வாணியின் தொகுப்புரை மிகமிக அருமை. பெய்ஜிங் அரங்கம் குறித்தும், நாடகவிழா அரங்கேறியது குறித்தும், குழந்தை நாடக விழா, பொம்மை நடனம், பிறந்த நாள் விருந்து, பூனை இசை நாடகம் குறித்தும், செபேரியா இசை நாடகம் பொன்றவை நடைபெற்றது குறித்து கேள்விப்பட்டு வியந்தேன் என்கிறார் பாண்டமங்கலம், P.R.கார்த்திகேயன்.

--நவ சீனா அமைக்கப்பட்ட பிறகு, கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் 9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. வியப்பை தருகிறது. 20 கோடிக்கும் அதிகமானோர் வறுமை தருகிறது. இந்த வளர்ச்சியின் வெற்றி முழுமைக்கும் அரசுக்கும் திட்டங்களை முறையாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் சேரும் என்பதை, பொது அறிவு போட்டிக்கான கட்டுரையில் கேட்டறிந்தேன் என்கிறார், பரசலூர், எஸ்.உத்தமசீலன்.

--பொது அறிவுப் போட்டிக்கான கட்டுரையின் முதல் பகுதியில் சீன பொருளாதார வளர்ச்சி எனும் தலைப்பில் இடம்பெற்றது. மிகவும் சிறப்பாக இருந்தது. கட்டுரை, பயனுள்ளதாக இருந்தது என்று நெய்வேலி A.M.சுப்ரமணியன் தெரிவித்தார்.