முதற்கண், நேயர் நேரம் மற்றும் நேயர் கடிதம் நிகழ்ச்சி பற்றிய கருத்துகளைக் காண்போம்.
--நேயர் நேரம் நிகழ்ச்சி 12 நிமிடங்களாக அதிகரித்திருப்பது முற்றிலும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். இதனால் தங்களுக்கும் இதர பணியாளர்களுக்கும் எனது அன்புகலந்த நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். இதனால் நேயர் கடித தொடர்புகள் அதிகரிக்கும் என நினைக்கின்றேன் என்கிறார் செந்தலை N.S.ராதாரவி.
--நேயர் நேரம் நிகழ்ச்சியினைக் கேட்டேன். எண்ணற்ற புதிய நேயர்களின் கருத்துக்களைக் கேட்கும் போது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்று சிறுநாயக்கன்பட்டி கே.வேலுசாமி தெரிவித்தார்.
--நேயர் நேரம் நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஒலிபரப்புக்கு உதவிய நேயர்களுக்கு நன்றி தெரிவிப்பதைக் கேட்டு, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஒரு பகுதி நேயர்கள், சீன வானொலியின் வளர்ச்சிக்கு இடையறாது பணிபுரிந்து வருகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று வளவனூர் புதுபாளையம் S.செல்வம் கூறினார்.
S.செல்வம் அவர்களே, தாங்கள் உள்ளிட்ட நேயர்கள் அனைவரும் சீன வானொலியின் நெருங்கிய நண்பர்களாவர். நமது நேயர்களின் ஆதரவு மற்றும் உதவியில் நாங்கள் எப்பொழுதும் கவனம் செலுத்தி வருகின்றோம். மிக்க நன்றி.
--நேயர் கடிதம் நிகழ்ச்சியில், கலைமகள் வாசித்த நேயர்களின் பெயர்களை கவனத்துடன் கேட்டு இன்புற்றோம். அருமையாக வாசித்தீர்கள். மிக்க நன்றி என்கிறார் விழுந்தமாவடி, R.மகேந்திரன்.
--நேயர் கடிதம் பகுதியில் பல நேயர்களின் பெயர் படிக்கப்பட்டது மிக்க சந்தோஷம். நான் பல கடிதம் எழுதியும் என்னுடைய பெயர் இடம்பெறவில்லை, என்ன காரணம் தெரியபடுத்தவும் என்று கண்டமங்கலம் எ.முஜீபுர் ரஹமான் கூறினார்.
அன்புடன் முஜீபுர் ரஹமான், மகேந்திரன், வணக்கம். நேயர் கடிதம் நிகழ்ச்சியில், கடிதம் கிடைக்கப்பெறும் நாள் வாரியாக தொகுத்து ஒழுங்காக வாசிக்கின்றேன். உங்களை போன்று, அடிக்கடி கடிதம் எழுதிய நேயர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிகின்றேன்.
எமது ஒலிபரப்பிலான சில நிகழ்ச்சிகள், நேயர்களுடன் சேர்ந்து தயாரிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் நட்பு பாலம், சீனாவுக்கு அப்பால், உங்கள் குரல், கேள்வியும் பதிலும் முதலியவை இடம்பெறுகின்றன.
--நேயர்களை சீன வானொலி எவ்வளவு உயர்வாக மதித்துச் சிறப்பான முறையில் கெளரவிக்கிறது என்பதை, ஈரோடு நாச்சிமுத்து அவர்களின் சீன இலவசப் பயணம் குறித்த பேட்டியின் மூலம் தெரிந்து கொண்டேன். பெய்ஜிங் நகரம் குறித்தும், அவர் பார்வையிட்ட தொழிற்சாலை குறித்தும் அவர் ஆச்சரியத்துடன் வழங்கிய செய்திகளைக் கேட்டு, நானும் அதிச்சரியத்தில் ஆழ்ந்து போனேன் என்கிறார் கயிலை வி.கண்ணன்.
--தமிழ்த்தென்றல் நேயர் மன்றம் வழங்கிய உங்கள் குரல் நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது. நேயர்களின் எண்ணங்களை குரலாக பதிவு செய்து நேயர்களை ஊக்கப்படுத்தி வரும் 30 பள்ளிப்பட்டி நேயர் மன்றத்திற்கு, புதுவை ஜீ.ராஜகோபால் வாழ்த்து தெரிவித்தார்.
--நட்பு பாலம் நிகழ்ச்சியில் சீனப் பெருஞ்சுவர் பற்றி தெளிவாகவும் அழகாகவும் திரு நாச்சிமுத்து அவர்கள் கூறினார். சீனப் பெருஞ்சுவரின் பெருமையை நமது நேயர் கூறியதை கேட்டு மகிழ்ச்சியாக இருந்தேன் என்று பாண்டமங்கலம் எம்.தியாகராஜன் தெரிவித்தார்.
--சீனாவுக்கு அப்பால் எனும் நிகழ்ச்சியில், கண்தானம் பற்றி பாண்டமங்கலம், M.தியாகராஜன் விளக்கமாகக் கூறினார். இறந்தவரின் கண்ணை உயருடன் இருப்பவர்க்கு கொடுத்து உதவுவது மிகச் சிறந்த செயலாகும் கண்ணை எடுக்கும் முறையை பயன்படுத்தும் விதத்தையும் மிகவும் அருமையாக கூறியதற்கு, மலையாம்பட்டு வி.தங்கராசு, ஆர் வேலு ஆகியோர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
--உத்தர பிரதேசத்தில் விளையும் இந்திய மாம்பழங்களுக்கு சீன சந்தையில் பெருமளவு வரவேற்பு உள்ளதையும் தமிழ் திரைப்படங்கள் சீன தேசத்தில் கூடிய விரைவில் திரையிட பட உள்ளதையும் கேட்டு, களிப்படைந்தோம் என்கிறார் செல்லூர் N.சீனிவாசன்.
--கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில், புதியன் பொது அறிவு போட்டிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இப்போட்டியில் சுமார் 20000 விடைத்தாள் அனுப்பப்பட்டுள்ளன என்று அறிந்தேன். நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து நேயர்கள் அனுப்பிய விடைத்தாள்களை அறிந்து மகிழ்கின்றேன் என்கிறார் ஆரணி M.S.சத்தியமூர்த்தி.
--நேருக்கு நேர் நிகழ்ச்சி கேட்டேன். முனுகப்பட்டு பி.கண்ணன்சேகருடன் திரு.தமிழ்செல்வம் உரையாடிய நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அவரது அனுபவங்களைக் கூறினார். சீன வானொலி தமிழ்பிரிவு செயல்பட வேண்டிய முறை குறித்து விளக்கினார். நிகழ்ச்சிகளின் சிறப்பை எடுத்துக்கூறினார். இவற்றைக் கேட்டு நாங்களும் சிந்தித்தோம் என்கிறார் ஆரணி S.மகேஸ்வர்.
|