• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-23 22:19:56    
நேயர் நேரம்64

cri
எமது ஒலிபரப்பில் பிற நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள்.

--தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஏனெனில் எளிய முறையில் நடைமுறை வார்த்தைகளை சீன மொழி மூலம் பேசுவது எப்படி என்பதை கூறினீர்கள். பாண்டமங்கலம் சகோதரர் நடத்திய முதல் பாடம் ஒரளவு சீன மொழி தெரியச் செய்துள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சி மூலம் சீன மொழியை பயில வெகு ஆவல் என்கிறார் சின்னவளையம் பி.பி பிரகாஷ்.

--நீதிக்கதைகள் பல மொழிகளிலும் அடங்கி உள்ளன. இந்த மொழிகளில் சீன மொழியும் ஒன்று. இவற்றை கேட்கும் போது மனதில் ஆர்வம் வருகிறது. பேராசிரியர் கடிகாசலம் மிகவும் முயன்று சீன கதைகளை அற்புதமாக சொல்கிறார் என்கிறார் முள்ளிப்பட்டு ஜெ.விஜய்.

--சீன மகளிர் நிகழ்ச்சியில், குதிரை பயிற்ச்சியாளராக உள்ள சகோதரி குறித்த செய்தியினை கேட்டேன். வியப்பாக இருந்தது. குதிரை ஏறி சவாரி செய்ய, பெண்கள், நம்பிக்கையுடன் முயற்சி செய்து, இன்று பலருக்கும் இந்த பயிற்ச்சியை கற்றுத்தரும் சிறந்த ஆசானாக உயர்ந்து இருக்கும் சீன மகளிரை நினைக்கையில் பெருமையாக உள்ளதை அறிந்தேன் என்கிறார் கைத்தறி நகர் J.D.மணிகண்டன்.

--சீன உணவு அரங்கம் பகுதியில், வேர்கடலை கருவாடு வறுவல் செய்வதை வாணி தமிழ்செல்வம் அவர்கள் மிகவும் அற்புதமாக எடுத்துசொன்னர் என்கிறார் சாத்தூர் சி.மனோகரன்.

--சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைந்திருந்தது. விரைவில் வேர்கடலை அவரையின் சுவையை அறிந்து மகிழ்ந்தேன் என்கிறார் வளவனூர் கே.சிவக்குமார்.

--சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சியில் நாசி இனத்தவர் பெரும்பான்மையாக வாழும் லீசான் நகரம் பற்றி, விபரமாக மிக விரிவாக, சுவைபட கூறியது அருமையாக இருந்தது என்று எஸ்.நாட்டாமங்கலம் எ.மாதுராஜ் தெரிவித்தார்.

--ஹான்சு நகரம் பற்றி கேட்டேன். இந்த நகரம் சர்வதேச பூங்கா நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. XI HU ஏரி, 2000 ஆண்டு வரலாறு கொண்டது. இந்த வசதியான வீடு போன்ற ஹான்சு நகரம் பற்றிய பல அரிய தகவல்களை, சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சி மூலம் அறிந்தேன் என்கிறார் ராமியம்பட்டி, S.பாரதி.

--இசை நிகழ்ச்சியில் சீன மக்கள் விடுதலைப்படை நிறுவப்பட்ட 77 ஆண்டுகள் நிறைவு பெறுவதை குறிக்கும் புதிய பாடல், வசந்த காலத்தின் கணவு ஆகிய பாடல்களை நான் விரும்பி கேட்டேன். இசையும் பாடல் பாடிய விதமும் நன்றாக இருந்தன என்கிறார் காசுக்காரன்பாளையம் D.நந்தகுமார்.

--நல வாழ்வு பாதுகாப்பில், குழந்தைகள் தொலைகாட்சியை நீண்ட நேரம் பார்ப்பதன் விளைவுகளை மிகவும் நன்றாகவும் விளக்கி கூறினீர்கள். இது, மக்களுக்கும் ஓர் எச்சரிகையாக இருக்கும். தாய் தந்தை தான் முதலில் TV பார்பதை நிறுத்த வேண்டும் என்று சொன்னது மிகவும் அருமை என்கிறார் நந்தியாலம், T.நந்தினி.