• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-23 00:26:14    
தமிழ் மூலம் சீனம் பாடம் 7

cri

வணக்கம் நேயர்களே. தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். முதலில் கடந்த முறை நாம் படித்தறிந்த இரண்டு உரையாடல்களை பார்ப்போம்.

你好吗?

我很好,谢谢,你呢?

我也很好,谢谢你!

நேயர்களே, இந்த உரையாடலுக்குத் தமிழில் என்ன பொருள் உங்களுக்குத் தெரியுமா? போன முறை நான் விளக்கிக் கூறினேன். நினைவில் இருக்கிறதா? இப்பொழுது. இந்த உரையாடலின் தமிழாக்கத்தை மீண்டும் வழங்குகின்றோம்.

你好吗?

நலமா?

我很好,谢谢!你呢?

நலம், நன்றி, நீங்கள்?

我也很好,谢谢你!

நானும் நலமே. நன்றி!

இந்த உரையாடலில் 呢 என்றால் என்ன பொருள் உங்களுக்குத் தெரியுமா?

இப்பொழுது நமது நேயர்களுக்கு மீண்டும் ஒரு முறை விளக்கிச் சொல்லுங்கள்.

呢 என்ற சொல் வார்த்தையின் கடைசியில் வரும் வினாக் குறியாகும். 你好吗 என்ற வார்த்தையிலுள்ள 吗 போல.

இப்பொழுது போன முறை படித்தறிந்த மற்றொரு உரையாடலை பார்ப்போம்.

你身体好吗?

我身体很好,你怎么样?

我也很好,谢谢!

உங்கள் உடல் நலம் எப்படி?

மிகவும் நலம், நன்றி!நீங்கள் எப்படி?

நானும் நலமே! நன்றி!

இப்பொழுது, வணக்கம் தெரிவிப்பது என்ற பாடத்தில் நாம் படித்தறிந்த அனைத்து சொற்களையும் பார்ப்போம்.

问候 (WEN HOU) வணக்கம் தெரிவிப்பது

你 (NI) நீ

你们 (NI MEN) நீங்கள்

我 (WO) நான்

我们 (WO MEN) நாங்கள்

他 (TA) அவர்

她 (TA) அவள்

它 (TA) அது

它们 (TA MEN) அவை

他们 (TA MEN) அவர்கள்

身体 (SHEN TI) உடல்

早上 (ZAO SHANG) காலை

上午 (SHANG WU) முற்பகல்

中午 (ZHONG WU) மத்தியானம்

下午 (XIA WU) பிற்பகல்

晚上 (WAN SHANG) இரவு

谢谢 (XIE XIE) நன்றி

怎么样 (ZEN ME YANG) எப்படி

很 (HEN) மிகவும்

也 (YE) உம்

呢 (NE) வினாக் குறி

吗 (MA) வினாக் குறி

நேயர்களே, இந்த சொற்கள் எல்லாம் முதலாவது பாடத்தில் இடம்பெறுகின்றன. உங்கள் மனதில் பதிந்திருக்கின்றனவா, நீங்கள் அதிகமாக பயிற்சி செய்யவேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் பயிற்சி செய்யுங்கள். முதலாவது பாடம் விரைவில் முடிவடையும். நாம் படித்தறிந்ததை பயன்படுத்தி, நமது நேயர்களில் யார் தொலைபேசி மூலம் எங்களோடு சீன மொழியில் பேச விரும்பினால் எங்களுடன் தாராளமாக தொடர்பு கொள்ளுங்கள். உளமார வரவேற்கின்றோம். இதுவும் ஒரு நல்ல பயிற்சி முறை, அல்லவா? உங்களுக்காக காத்திருக்கின்றோம்.