• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-25 20:11:49    
நேயர் நேரம்65

cri
முதற்கண், அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களைப் பார்ப்போம். திரு N.கடிகாச்சலம் அவர்கள் இந்தியாவுக்கு திரும்பிய பின், வாரம் தோறும் இந்த அருமையான நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கினார். பல நேயர்கள் கடிதங்களின் மூலம் அவர்களை பாராட்டினர்.

--குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும், உடல் ரீதியான விளைவுகளை கூறினீர்கள். ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் குழந்தைகளை மனதில் நினைத்து, முதலில் பெரியவர்கள் தொடர்ந்து பல மணி நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தினால் தான், அவர்களின் குழந்தைகளும் நிறுத்துவார்கள் என்கிறார் ஆண்டிமடம், S.நீலமேகம் பத்மா.

--இப்பகுதியில், வருத்தமளிக்கக்கூடிய செய்தி என்ன வென்றால், வறிய மக்களுக்கு பெருமளவில், எய்ட்ஸ் நோய் பிடித்துள்ளது. இதற்கான மருந்தை தயாரிப்பதில் லாபம் கிடையாது என்பதால், பலர் முன்வருவதில்லை. இனிவரும் காலங்களில் குறைந்த செலவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, பலரது உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்றேன் என்கிறார் திருச்சி காஜாமலை G.பிரபாகரன்.

--இதில், ஈடு இணையற்ற கிரான்ஸ் கிரிக் பற்றி கேட்டேன். இவரின் தலைசிறந்த D.N.A. கண்டு பிடிப்பால் உலகமக்களின் வளமை அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஈடு இணை இல்லாத அறிவியலாளரின் வாழ்விலிருந்து பல தரப்பட்ட சம்பவங்கள் சிறப்புடன் எங்களுக்கு தொகுத்து வழங்கப்பட்டன தாங்களும் எங்களுக்கு தமிழ்மொழி அறிவியல் வல்லுனராக எங்களுக்கு தரவுகளை வழங்குகினீர்கள் என்கிறார் ராமியம்பட்டி S.பாரதி.

--ஈடு இணையற்ற அறிவியலாளர் மிரான்சிஸ் கிரிக் பற்றியும் தொலைக்காட்சி அதிக நேரம் பார்ப்பது எவ்வித தீங்குகளை உருவாக்குவது பற்றியும் அறிந்துள்ளேன். நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி மூலம் மீன் சாப்பிடுவது நல்லது, ஆனால், அதிகமாக சாப்பிட்டால் அதுவும் ஆபத்து என்றும் அறிந்தேன் என்கிறார் சின்னவளையம் P.P.பிரகாஷ்.

--எலியின் இனபெ பருக்கத்துக்கு தடை பற்றி அறிய முடிந்தது. சார்ஸ் நோய் பரவ எலி ஒரு முக்கிய காரணியாக இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது என்கிறார் குருணிகுளத்துப்பட்டி சி.முருகன்.

--இந்நிகழ்ச்சியில் கடிகாச்சலம் வழங்கிய ஈடு இணையற்ற அறிவியாளர் பிரான்சிஸ் கிரிப்ட் எனும் கட்டுரையை கேட்டேன். 1953ல் D.N.A. கட்டமைப்பை கண்டு பிடித்த பிரான்சிஸ் கிரிப்ட் 1962ல் நோபல் பரிசு பெற்றதையும் அறிய முடிந்தது. 88 வயதில் அண்மையில் காலமாகி விட்டாலும், உலகம் இருக்கும் வரை அவரின் சாதனை தொடரும் என்கிறார் காசுக்காரன்பாளையம் D.நந்தகுமார்.

--சீன வானொலிக்கு பெரும் புகழினை தேடி தரும் அறிவியல் உலகம் நிகழ்ச்சி கேட்டோம். அதில் வழங்கப்பட்ட காச நோய் பற்றிய தகவல்களும், எய்ட்ஸ் நோய் பற்றிய செய்திகளும் மிகமிக அருமை. அதே போல் எய்ட்ஸ் நோய் பற்றிய பல நல்ல செய்திகள், விரிவாக வழங்கப்பட்டதும் போற்றத்தக்கது என்று, செல்லூர் N.சீனிவாசன் தெரிவித்தார்.

--குறுகிய காலத்தில் நரம்பியல் அறுவைச்சிகிச்சையில் சீனாவின் முன்னேற்றம் பற்றி தெளிவாகவும் நிதானமாகவும் திரு கடிகாச்சலம் அவர்கள் கூறினார். இந்நிகழ்ச்சி மூலம் பல பயனுள்ள செய்திகளை அறிய முடிந்தது என்கிறார் கணியூர் தி.மணிகண்டன்.