• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-01 08:22:25    
கடந்த வாரம் உலகில் நடைபெற்ற விளையாட்டுச் செய்திகள் 1

cri

2005ஆம் ஆண்டு சர்வதேச மேசை பந்து தொழில் முறை போட்டியின் காத்தார் சுற்று 25ஆம் நாள் நிறைவடைந்தது. மகளிருக்கான இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனை கோ யுயே, நியூ ச்சியன் பொங் ஜோடி 4-0 என்ற செட் கணக்கில் ஹாங்கேரி வீராங்கனைகளான பதோப்பி, தோட் ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. ஆடவருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் வாங் லி ச்சின் 4-1 என்ற ஆட்டக் கணக்கில் தனது அணி தோழரான மாலினைத் தோற்கடித்த சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஆடவருக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில் சீன வீரர்கள் கொங் லிங் குய் வாங் ஹௌ ஜோடி 4-1 என்ற ஆட்டக்கணிக்கில் சீனா அணியின் இன்னொரு ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. மகளிருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சாங் யீ நிங் 4-1 என்ற ஆட்டக்கணக்கில் தனது அணி தோழியரான வாங் நானைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.  

பனிச்சறுக்கல் 2005ஆம் ஆண்டு உலகப் கோப்பைக்கான விரைவுப் பனிச்சறுக்கல் போட்டியின் கடைசி சுற்று, 20ஆம் நாள் நெதர்லாந்தில் நிறைவடைந்தது. மகளிருக்கான 500 மீட்டர் பனிச்சறுக்கல் போட்டியில் சீன வீராங்கனை வாங் மன் லி சாம்பியன் பட்டம் பெற்றார். அத்துடன் 810 புள்ளிகளை பெற்று, இந்த போட்டியின் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றார்.

19ஆம் நாள் ஷாங்கை மாநகரில் நடைபெற்ற சீனத் தேசிய உள்ளரங்க தடகளப்போட்டியில், மகளிருக்கான ஐவகை உடல்திறன் விளையாட்டுப் போட்டியில் செச்சியாங் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை சென் செங் பெய் 4266 புள்ளிகள் என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். இது, அவர் முன்பு நிலைநிறுத்திய 4211 புள்ளி என்ற தேசிய சாதனையைத் தாண்டியுள்ளது.

2004-2005 உலக கோப்பைக்கான சைக்கிள் ஓட்டப் பந்தயத்தின் ஆஸ்திரேலிய சுற்று, 20ஆம் நாள் நிறைவடைந்தது. 19 வயதான சீன வீராங்கனை கோ சுவாங் மகளிர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். 18ஆம் நாள் நடைபெற்ற பந்தயத்தில் அவர் ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்றார்.