நேயர்களால் வரவேற்கப்படும் நிகழ்ச்சிகளில், சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சி இடம்பெற்றது. சீனாவின் பல்வேறு சிறுப்பான்மை தேசிய இனங்களின் வரலாறு, பண்பாடு, வாழ்வு முறை முதலியவற்றை இந்த நிகழ்ச்சியில் காணலாம்.
--இப்பகுதியில் வான் சோ பற்றியும் அவர் இணையதளத்தில் எவ்வாறு செயல்பட்டார் என்றும் அவர் வயது 3, என்றும் அவர் எப்போது சுறுச்சுறுப்பாக செயல்படுவார் என்றும் அவருக்கு பல நண்பர்கள் உள்ளார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். மேலும் அவர் பற்றிய பல தகவல்கள் பற்றியும் தெரிந்துக்கொண்டேன். சிறப்பாக தொகுத்து வழங்கிய பாச மிகு அறிவிப்பாளாருக்கு நன்றிகள் என்கிறார் கண்டமங்கலம் A.முஜீபுர் ரஹ்மான்.
--திபெத் இன மக்கள் பற்றி கூறப்பட்டது. இந்நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் மரங்களில் வசிக்கின்ற பல வகையான பறவைகளின் ஒலிகள் பதிவு செய்தது மிகவும் சிறப்பாக இயற்கையாக இருந்தது. மரங்கள் ஒரு நாட்டின் இன்றிமையாதது இயற்கை செல்வங்கள் நாட்டின் முதுக்கெலும்பு போல இருக்க வேண்டும் நல்ல மழை நல்ல காற்று தரும் இந்த இயற்கை வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்கிறார் ராசிபுரம், R.M.மோகன்.
--இதில் தோரோங் இனத்தவரின் முதலாவது அறிவாளர் பற்றிய தகவல்கள் அறிந்துக்கொள்ள முடிந்தது. யாங்சியாங் யிங் என்பவரின் கல்வி கற்ற இனிய அனுபவங்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்துக்கொள்ள முடிந்தது என்கிறார் 30 பள்ளிப்பட்டி P.R.சுப்ரமணியன்.
--இந்நிகழ்ச்சியின் மூலம் நான் சீனாவிலுள்ள வாழ்க்கை முறை பற்றி தெரிந்து கொண்டேன். இந்நிகழ்ச்சி குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டுள்ள சீனத் தாய்மார்களைப் பற்றியது. சீன தேசிய இனக்குடும்பம் எனும் தலைப்பில் சீனப் பெண்களின் குழந்தை வளர்ப்பு முறை பற்றி நான் தெளிவாக அறிந்துகொண்டேன் என்கிறார் ராசிபுரம், எ.தேவகி.
அடுத்து, சீன மகளிர் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்.
--இன்றைய நிகழ்ச்சியில், ஒரு தம்பதி ஒரு குழந்தை என்ற முறையில், அமைப்பில் குடும்பம் நடத்தினால் சிறந்த வாழ்க்கையாகும். ஒரு குழந்தையை வளர்த்து இன்புற்று வாழ்வோமாக என்ற நிகழ்ச்சி, பாராட்டத்தக்கது. நிகழ்ச்சியை வழங்கிய P.லூசா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என்று, உத்திரக்குடி சு.கலைவாணன்ராதிகா தெரிவித்தார்.
--இந்நிகழ்ச்சியில், தலைசிறந்த காவல் துறை அதிகாரி REN CHANG XIA அம்மையார் பற்றி அறிந்தேன். 21 ஆண்டுகள் நேர்மையாக பணிபுரிந்த இவர், 10 முக்கிய வழக்குகளில் துப்புதுலக்கி குற்றவாளிகளை இனம் கண்டதைவிட, வான்சோ கொலைவழக்கு துப்பு, அவரின் காவல் துறை பணிக்கு கிடைத்த வெற்றி எனலாம் என்கிறார் புதுக்கோட்டை ஜீ.வரதராஜன்.
--இதில் 87 வயதான மியாவாங்சோ அம்மையாரின் காகித கத்தரிப்புகலைத் திறமையைக் கண்டுவியந்தோம். தள்ளாத வயதிலும் பொழுது போக்காக காகிதகத்தரிப்புக்கலையை செய்து கொண்டு இருப்பது பாராட்டிற்குரியது என்று மீனாட்சிபாளையம் கே.அருண் தெரிவித்தார்.
--மாநகரில் கிராமத்தில் கத்தரிப்பு கலையில் மிகவும் பிரபலம் வாயந்த மூதாட்டி பற்றி அறியத்தந்தீர்கள். கத்திரிப்புகலையினை சீன மக்கள் மிகவும் விரும்பி போற்றி வருகின்றனர் என்பதை நிகழ்ச்சியினை செவிபடுக்கும் போது அறிய முடிந்தது. அவரது கலை எத்தளவு சிறப்புற்றுள்ளது என்பதையும் அறிய முடிந்தது என்கிறார் திருச்சி அண்ணாநகர் V.T.ரவிச்சந்திரன்.
--இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்ற எழுத்தாளர் ஏகுவன் சின் அம்மையார் பற்றி கேட்டேன். எடுத்தாளரான அவர், கலாச்சாரபுரட்சியின் போது, வேளாண் தொழிலாளியாக பணிபுரிய நேரிட்டது மனதுக்கு கடினமாகத் தான்தோன்றியது. கலாச்சாரபுரட்சி என்பது, நினைவுக்கு மேலுமொரு சம்பவம் நிகழ்கிறது என்பதை தெரிந்து கொண்டேன் என்கிறார் மணமேடு M.தேவராஜா.
--சீன மகளிர் நிகழ்ச்சியில் காகித கத்தரிப்பு கலைபுணர் மியா அவர்கள் பற்றி கூறியது வியக்கத்தக்கது. உலகம் உள்ளவரை மியாவின் புகழ் என்று என்றும் இருக்கும். மியாவை எங்களுக்கு அறிமுகம் செய்த சீன வானொலிக்கு மிக்க நன்றி என்று விழுப்புரம் S.பாண்டியராஜன் தெரிவித்தார்.
|