வணக்கம் நேயர்களே. இப்பொழுது தமிழ் மூலம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்தித்துள்ளோம். எப்படி, நலமா? வேலை அதிகமா? நாம் முதலாவது பாடத்தை முழுமையாக படித்திருக்கின்றோம். சீன மொழி சொற்களும் உரையாடல்களும் நினைவில் பதிந்திருக்கின்றனவா. என்னோடு சீன மொழியில் பேச விருப்பமா?
முதலில் கடந்த முறை நாம் தொகுத்து வழங்கிய முதலாவது பாடத்தில் தோன்றிய சொற்களை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.
问候 (WEN HOU) வணக்கம் தெரிவிப்பது
你 (NI) நீ
你们 (NI MEN) நீங்கள்
我 (WO) நான்
我们 (WO MEN) நாங்கள்
他 (TA) அவர்
她 (TA) அவள்
它 (TA) அது
它们 (TA MEN) அவை
他们 (TA MEN) அவர்கள்
身体 (SHEN TI) உடல்
早上 (ZAO SHANG) காலை
上午 (SHANG WU) முற்பகல்
中午 (ZHONG WU) மத்தியானம்
下午 (XIA WU) பிற்பகல்
晚上 (WAN SHANG) இரவு
谢谢 (XIE XIE) நன்றி
怎么样 (ZEN ME YANG) எப்படி
很 (HEN) மிகவும்
也 (YE) உம்
呢 (NE) வினாக் குறி
吗 (MA) வினாக் குறி
மீண்டும் ஒரு முறை படியுங்கள்.
இப்பொழுது நாம் படித்தறிந்த சொற்கள் இடம் பெறும் ஒரு உரையாடலை படிக்கின்றோம்.
你好吗? நலமா?
我很好,你呢? நலம் தான், நீங்கள் எப்படி?
我也很好 谢谢。 நானும் நலம், நன்றி!
你工作忙吗? உங்கள் வேலை அதிகமா?
我工作很忙,你怎么样? மிகவும் அதிகம், நீங்களோ?
我也很忙。 எனக்கும் வேலை அதிகம்.
你身体好吗? உங்கள் உடல் எப்படி?
我身体很好,你呢? உடல் நலம் தான், நீங்கள்?
你爸爸,妈妈,身体怎么样? உங்கள் அப்பா, அம்மா உடல் எப்படி?
他们也很好,谢谢你!再见! அவர்களும் நலம் தான், மிக்க நன்றி! வணக்கம்
இந்த உரையாடலில், மொத்தம் 4 புதிய சொற்கள் தோன்றியுள்ளன.工作 என்றால், வேலை என்று பொருள், 忙 என்றால் வேலை அதிகம் என்று பொருள். 爸爸 என்றால் அப்பா என்று பொருள். 妈妈 என்றால் அம்மா என்று பொருள்.
நேயர்களே இந்த புதிய சொற்களை நீங்கள் படித்தறிந்த பின், இந்த உரையாலை மிகவும் எளிதாக அறிந்துகொள்வீர்கள். இப்பொழுது எங்களுடன் இந்த உரையாடலை மீண்டும் படியுங்கள்.
அன்புடைய நேயர்களே, இன்றைய பாடத்தில், கொஞ்சம் நீளமான உரையாடலை படித்திறிந்துள்ளோம். எப்படி பிடிக்குமா?பாடத்துக்குப் பின் நன்றாக பயிற்சி செய்யுங்கள். நன்றாக கிரகித்த பிறகு தொலைபேசியில் என்னோடு உரையாடலாம். விருப்பமா?
|