• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-01 15:23:44    
நேயர் நேரம்67

cri
டிசம்பர் திங்கள் 20ம் நாள் செய்தி பகுதியில் 2004ம் ஆண்டில் சீனாவின் பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன என்பதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். 2005ம் ஆண்டிலும் இப்பணி விறுவிறுப்பாக தொடர் வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 2004ம் ஆண்டு 39000 நிறுவனங்கள் ஏற்று செய்து இந்தியாவில் தொழிலைத் துவங்கியுள்ளன என்பதை அறிந்து கொண்டேன் பறவை புளுவை சமாளிக்கும் வகையில் ஆசியானின் உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என சிங்கப்பூர் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்ற செய்தியை அறிந்தேன். வலுவான ஒத்துழைப்பு மூலம் புளு நோயை நாம் விரட்டி அடிக்கலாம் கடந்த டிசம்பர் திங்கள் 22ம் நாள் இடம்பெற்ற செய்திகளில் வளர்ச்சி அடைந்துள் நாடுகளுக்கு சமமாக சீனாவில் காடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்ற செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் நாட்டின் வளத்தை பாதுகாக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு என் பாராட்டுக்கள் என்று வளவனுர் புதுப்பாளையம் எஸ் செல்வம் தமது கடந்த டிசம்பர் திங்களின் கடிதங்களில் தெரிவித்துள்ளார். நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி மூலம் கறுப்பு சாக்லெட் எந்த வகையில் நமக்கு பயன்படுகிறது என்பதையும் பால்கலந்த சாக்லெட்டை விட சிறந்தது என்பதையும் அறியச் செய்தீர்கள். மலையேறும் வீரருக்கு என்ன தகுதி வேண்டும் என்பதையும் இடையே ஏற்படும் தாகத்திற்கு வெந்நீர் குடிக்க வேண்டும் என்று கூறியதையும் கேட்டு தெரிந்து கொண்டோம் பொருளாதார வளர்ச்சியில் முன்பை விட வளர்ச்சி அடைந்து அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று கிராமவாசிகள் நகர வாசிகளாக மாறி வரும் ஹூசின் நகரம் பற்றி மக்கள் சீனம் நிகழ்ச்சியில் நன்கு தெரிந்து கொண்டேன். சீன சமூக வாழ்வில் அதிகப்படியான வருமானத்தையும் பொருட் படுத்தாமல் ஹூசு பள்ளியினை நிறுவி விளையாட்டு வீரர்களை உருவாக்குவதோடு சிறந்து விளங்க கல்வியையும் அதிக ஆர்வத்தோடு கற்பிக்கும் இந்த பள்ளி உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது என்று சின்னவளையம் பி பி பிரகாஷ் தமது கடந்த நவம்பர் திங்கள் கடிதங்களில் கூறியுள்ளார். ஜனவரி திங்கள் 4ம் நாள் நிகழ்ச்சியில் 31 பேர் கொண்ட சீன மருத்துவ பணிக் குழுவினர் கடந்த முதலாம் நாள் இரவில் இந்தோனேசிய சென்றடைந்ததும், அடுத்த நாள் அதிகாலை முதலே மீட்பு பணியில் ஈடுபடத் தவங்கியதும் அறுவை சிகிச்சை அரங்குடன், கூடிய ஒருதற்காலிக மருத்துவ மனையை நிறுவி பணிகளை மேற்கொண்டதையும், கேட்டு மெய்சிலிர்த்தோம். இது தவிர பெய்சிங் மாநகர நிர்வாகம் ஒரு மருத்துவ குழுவை விரைவிலேயே இலங்கைக்கு அனுப்ப உள்ளதையும் கேட்டு உள்ளம் குளிர்ந்தோம். மொத்தத்தில் மனித நேய அடிப்படையிலான நிவாரணப்பணிகளில் சீன அரசு காட்டும் அக்கறையும் கவனமும் வல்லரசு நாடுகளின் புருவங்களை வியப்பில் விரிப்பது போல உள்ளது என்று சேலம் மாவட்டம் நேயர் ப மோகன சுந்தரம் தமது கடந்த டிசம்பர் திங்களில் கடிதங்களில் தெரிவித்துள்ளார்.