 உயிரி அறிவியலானது இன்றைய உலகில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் அடிப்படை இயற்கை அறிவியல்களில் ஒன்றாகும். அது முக்கியமாக உயிர் நிலைமை உயிரின் நடவடிக்கைகளின் இயல்பு தனிச்சிறப்பு அவற்றின் நிகழ்வு மற்றும் வளர்ச்சி விதிகளை முக்கியமாக ஆராய்கின்றது. உயிர் நடவடிக்கைகளை பயன் தரும் முறையில் கட்டுப்படுத்தி உயிரின துறையை மாற்றியமைத்து மக்களுக்கு நன்மை பயப்பது என்பது அதன் நோக்கமாகும். தற்போது வாழ்க்கை அறிவியல் மனிதகுலத்தின் வாழ்வு ஆரோக்கியம் பொருளாதார மர்றும் சமுதாயத்தின் வளர்ச்சி ஆகியவற்ருடன் மிக நெருஹ்கிய தொடர்பு கொண்டுள்ளது. இப்போது சீனாவின் உயிரி அறிவியல் பயன்பாடு பற்றி கூறுகிறோம்.

முதன்முதலாக ஒரு குழு எண்ணிக்கையை பார்ப்போம். 1950ல் சீனாவில் சராசரி ஆயுள் 35 வயதாக இருந்தது. இப்போதோ 73 ஆண்டாக உயர்ந்துள்ளது. பெய்சிங் பல்கலைக்கழகத்தின் மருத்துவவியல் கல்லூரியின் பேராசிரியர் ஓங் வென் லீ அம்மையார், சீன மக்களின் ஆயுள் நீடிப்பும் உடல் நல நிலைமை மேம்பாடும் உயிரி அறிவியல் வளர்ச்சியுடன் நேரடியான தொடர்பு கொண்டுள்ளன என கருதுகிறார்.

இப்போது உயிரி அறிவியல் மிக விவரமாக வளர்ச்சியுற்று வருகின்றது. இது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியும் ஊக்கமும் தருகின்றது. முன்பு நினைக்க முடியாத காரியங்கள் பல இப்போது செய்ய முடிந்துள்ளன. ஒவ்வொருவரும் மேலும் மகிழ்ச்சியாகவும் மேலும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.

மேலும் உயிரி அறிவியல் தொழில் நுட்பத்தை கொண்டு தயாரித்த அம்மை பால் சீன மக்களின் உடல் நலத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 1949ல் நவ சீனா நிறுவப்பட்ட துவக்கக் காலத்தில் பெரிய அம்மை காலரா காச நோய் உள்ளிட்ட பல தொற்றுநோய்கள் சீனாவில் தலைவிரித்தாடின. அவை பொது மக்களின் உடல் நலத்துக்கு பெரும் தீங்கு விளைவித்தன. இந்நிலைமையை மாற்றும் பொருட்டு சீனா அம்மை பால் மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை வலுப்படுத்தி அம்மை பால் மருந்து தடுப்பூசி போடும் பணியை பெரிய அளவில் செயல்படுத்தியது. இவ்வாறு பயன்தரும் முறையில் தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்தி பொது மக்களின் உடல் நலத்துக்கு உத்தரவாதம் தந்துள்ளது. இதில் பெரிய அம்மை நோய் தடுப்பூசி மருந்து போடும் பணி பெரும் வெற்றி கண்டது. இதனால் 1960ல் சீனா பெரிய அம்மை நோயை அழித்தொழித்தது. உலகில் கடைசியான பெரிய அம்மை நோயாளி கண்டறியப்பட்டதை விட 10 ஆண்டுகள் முன்னதாக உள்ளது.
|