• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-05 20:30:24    
சர்வதேச முறைமையில் சீனாவின் தகுநிலை

cri

 

இதை வேகமாக வளர்ச்சி கண்ட பெரிய நாடான சீனா புரிந்து கொண்டது. அதாவது, ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் உலகமயமாக்கம் விரைவாக வளர்ந்த பின்னணியில் சீன அரசின் நலன் உலக நலனுடன் நெருக்கமாக நின்னிப்பிணைந்தது. உலகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யோசனை முன்வைக்கும் அதேவேளையில் தனது சொந்த நலனை நிறைவேற்றவும் பயன் மிக்க பல தரப்பு தூதாண்மை தனக்குத் துணை புரியும் என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.

மோதலை குறைப்பதற்கு துணை புரியும் பல தரப்பு தூதாண்மை

தொடர்புடைய நாடுகளுடன் இரு தரப்புறவை வளர்க்க பல தரப்பு தூதாண்மை சீனாவுக்கு புதிய சிந்தனையை வழங்கியுள்ளது. இந்த உறவை வளர்க்கும் போது அரசுகளுக்கிடையில் மேலும் ஆழமான நீண்டகால ஒத்துழைப்பு கவனிக்கப்படும். சில வேளைகளில் குறிப்பிட துறைகளில் தனது சொந்த நலனை ஒரு தரப்பு அல்லது இருதரப்பு நலனை கைவிட வேண்டும் என்று பல தரப்பு தூதாண்மை கோருகின்றது. ஆகவே நாடுகளுக்கிடையிலான முரண்பாட்டையும் மோதலையும் குறைப்பதற்கு இது உதவும். நாடுகளுக்கு இடையிலான உறவு பரஸ்பரம் சீராக வளர இது தூண்டுகோலாக இருக்கும்.

இந்த ஆணுகுமுளையை இரு தரப்பு தூதாண்மையுடன் இணைத்து, இவையனைத்தையும் ஒட்டுமொத்த அயல் உறவில் சேர்ப்பது என்பது சீனா பல தரப்பு வெளிவிவ காரத்தை மேற்கொள்வதற்கான சிறப்புக் காரணமாகும். பல தரப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போதெல்லாம், சீனத் தலைவர்கள் இரு தரப்பு சந்திப்புக்களை நிகழ்த்த வேண்டும். உயர் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு மேல்பட்டத் தூதாண்மையை மேற்கொள்வதால் சீனாவுக்கு அதிக நண்பர்கள் கிடைத்தனர். சீனாவுக்கும் தொடர்புடைய நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பும் இரு தரப்புறவின் வளர்ச்சியும் தூண்டப்பட்டது. சீன ஜப்பானிய உறவில் நெருக்கடி ஏற்பட்டு பரஸ்பர பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளின் தலைவர்களிடையே தொடர்பு ஏற்பட பல தரப்புத் தூதாண்மை உதவியுள்ளது.

அதேவேளையில் சீனாவின் பங்கு இல்லாமல் பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் தீர்க்கப்படவே முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. சீனாவின் ஒத்துழைப்பு இல்லை என்றால் இது நடைமுறைப்படுத்தப்பட முடியாது என்பதை மேலும் அதிகமான சர்வதேச அமைப்புக்கள் உணந்து கொண்டுள்ளன. பல தரப்பு வெளியுறவில் சீனத் தூதாண்மைக்கு உறுதியான இடம் உண்டு என்பதை உலகம் புலிந்து கொண்டது.