• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-04 19:44:56    
சீன முட்டை தோசை

cri

ராஜா—அண்மையில் எனக்கு பெய்ஜிங் நகரில் கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. நானும் சிங்கள நண்பர் மெந்தக அபயசேகராவும் தெருவில் நடந்து போனபோது, ஒரு தள்ளுவண்டி அருகே ஒரு கூட்டம். எட்டிப் பார்த்தோம். ஒருவன் தோசை போல் ஏதோ சுட்டு, அதை மடித்துக் கொடுத்துக்கொண்டிரருந்தான். மக்கள் போட்டி போட்டு வாங்கித் தின்றார்கள். அதன் விலை 2 யுவான். நாங்களும் வாங்கிச் சாப்பிட்டோம். சுவையாக இருந்தது. கலைமகள், அது என்ன உணவு? உங்களுக்குத் தெரியுமா?

கலை—ஓ! அதுவா, அதன் சீனப் பெயர் JIAN BING. இது, TIAN JIN மாநகரின் பாரம்பரிய உணவு. நம்ம நேயர்களுக்காக இதற்கு ஒரு தமிழ்ப் பெயர் கொடுக்கலாமா? இதை, சீன முட்டை தோசை என்று சொல்லலாம்.

ராஜா—முட்டை தோசை, தமிழ்நாட்டிலே ரொம்ப பிரபலமானது. ஆகவே, சீன முட்டை தோசையை நேயர்கள் நிச்சயம் விரும்புவார்கள். அதன் சுவை வித்தியாசமானது. இதைத் தயாரிக்க என்னென்ன பொருட்கள் வேண்டும்?

கலை—பாசிப்பயறு மாவு

ஒரு முட்டை

வெங்காயம் 1,

பச்சை மிளகாய் 1,

கொத்துமல்லி இலை

எள்ளு

சோயா சாஸ்

கெட்டியாக கரைத்த மிளகாய் வற்றல் பொடி

சாஸ்

வெள்ளை பூண்டு சாஸ்

கோதுமை மாவு

ராஜா—சரி, எல்லாம் எடுத்து வைத்திருக்கிறது. அந்த வண்டிக்காரன் இதை எப்படி தயாரித்தான் என்று நான் சொல்லட்டுமா? நான் நேரில் பார்த்ததைச் சொல்கிறேன்.

கலை—சரி, ஏதாவது தப்பு இருந்தால் நான் திருத்துகிறேன்.

ராஜா—பயற்றம் பருப்பு மாவை, தோசை மாவு பக்குவத்திற்கு கரைத்துக் கொள்ளணும்.

கலை—அப்புறம்?

ராஜா—அப்புறம், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்துமல்லி இலை இவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கி, தனியாக எடுத்து வைக்கணும். இன்னொரு விஷயம் ரொம்ப முக்கியமானது. இதைச் செய்வதற்கு முன்னால் கோதுமை மாவு பிசைந்து பூரி போல எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைக்கணும், சரியா?

கலை—சரி. பூரியில் இருந்து எண்ணெய் இல்லாமல் வடிந்து விடும். இனி, தோசை சட்டியில் எண்ணெய் விட்டு, பயற்றம் பருப்பு மாவை தோசை போல் வார்க்கணும். கொஞ்சம் பெரிய வட்டமாக ஊற்றுங்கள். அதன் மீது ஒரு முட்டையை உடைத்து பரவலாக ஊற்றணும் ஒரே இடத்தில் ஊற்றிவிடக் கூடாது. பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை இவற்றை அந்தத் தோசை மீது தூவணும். லேசாக வெந்த பிறகு சோயா சாஸ், மிளகாய் வற்றல் சாஸ், பூண்டுசாஸ் இவற்றை தோசை மீது தடவ வேண்டும். பிறகு, என்னைத் தூவணும். பிறகு தோசையை புரட்டிப் போடணும். இரண்டுபுறம், நன்றாக வெந்ததும் அதில சுட்டு வைத்த பூரியை நடுவில் வைத்து மடித்து, பிரெட் தின்பது போல கடித்து கடித்து தின்ன வேண்டியதுதான். சுவையோ சுவை, சூப்பர் சுவை.