
இப்போது, கட்டிடக்கலைத் தொழில், Tong Hai இல் வாழும் மங்கோலிய இன மக்கள் ஈடுபடும் முக்கிய தொழிலாக மாறியுள்ளது. இடைவிடா படிப்பு மற்றும் புத்தாக்கத்தின் மூலம், அவர்களின் ஆற்றல் மேலும் வலிமையாகியுள்ளது. தொழில் நுட்பம் மேலும் செம்மையாகத் திகழ்கின்றது. பல்வகை இனங்களின் கட்டிட திட்டப்பணிகளுக்கு அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். மாநிலம் மாநிலத்துக்கு வெளிப்புறம், வெளிநாடு ஆகியவற்றில் யுன்னான் மங்கோலிய இன கட்டிடக்காரர்களின் அடிச்சுவடுகள் காணப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளில், கட்டிடத்தொழில் தவிர, வேளாண் மற்றும் துணைத் தொழில், சேவைத்துறை ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாக அவர்களின் வாழ்க்கை மேலும் வளமடைந்துள்ளது. நீண்டகாலமாக Tong Hai இல் வசித்து வந்துள்ள யுன்னான் மங்கோலிய இனத்தவரான Lin Jing பேசுகையில், தமது ஊர்வாசிகளில் பெரும்பாலானோர் வசதியாக வாழ்கின்றனர்" என்று கூறினார். அவர் கூறியதாவது:
"இப்போது, புகையிலை பயிரிடுவது, உணவுக்கடையை நடத்துவது முதலியவற்றின் மூலம், மங்கோலிய இன மக்கள் நன்றாக வாழ்கின்றனர். பல குடும்பங்களுக்கு மோட்டார் வண்டி, கார் இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கை, வளமானது" என்றார், அவர்.
கால வளர்ச்சியுடன், புத்தாக்கம் மற்றும் சீர்திருத்தம் மேற்கொண்டு வரும் யுன்னான் மங்கோலிய இன மக்கள், முன்னணியில் நின்று நவீனமயமாக்க வாழ்க்கை அனுபவிக்கின்றனர். அவர்கள் மேன்மேலும் சீராக வாழ வேண்டும் என வாழ்த்துக்கின்றோம். 1 2 3 4
|