• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-04 16:19:49    
நேயர் நேரம்68

cri
இவ்வாண்டு ஜனவரி ஆறாம் நாள் செய்திகளில் மீட்பு பணி பற்றிய ஆசியான் தலைவர்களின் சிறப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசியா புறப்பட்டு சென்ற பிரதமர் திரு வெங்சியபாவ் அவர்கள் தாம் சென்ற அதே விமானத்தில் சுமார் 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கொண்டு சென்றதும். இதுவரை 400 டன்னுக்கும் மேலான நிவாரண பொருட்களை சீன ராணுவம் தனது படை விமானங்கள் வாயிலாக அனுப்பி வைத்ததும், சீன DNA தொழில் நுட்ப வல்லுனர்கள் தாய்லாந்து நாட்டில் நடைபெறும் மீட்பு பணியில் ஈடுப்ட்டுள்ளதையும் சீன வானொலி பணியாளர்கள் அனைவரும் சுனாமி நிவாரண நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதையும் கேட்டு உள்ளம் மகிழ்ந்தோம். இதன் மூலம் உலக நாடுகள் அனைத்திற்கும் சீனா ஒரு நம்பத் தகுந்த நண்பன் என்பதை முழுமையாக உணர முடிகிறது. நன்றி. .2 12 04 அன்று வந்த அறிவியல் உலகம் நிகழ்ச்சிகளை கேட்டேன். இதில் ஆஸ்ட்ரோஜன் என்னும் தலைப்பில் வந்தது. இதில் மகளிர் உடம்பில் ஆஸ்ட்ரோஜன் அளவு செயல்பாடு மற்றும் விளைவுகள் தொப்பை சிகிச்சை முறை ஆஸ்துமா நோய் தடுப்பு முறை உடற்பயிற்சி முறைகள் ஆகிய செய்திகளுடன் வந்த சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தாயத்து பற்றிய ஆய்வு செய்து அது பலன் தராது என்ற உண்மையுடன் காக்கா வலிப்பைத் தடுக்க சாவி இரும்புபொருள் கொடுப்பது ஆகிய செய்திகள் வந்தன நிகழ்ச்சி அருமை. சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் காய்கறி கூட்டு என்னும் உணவு வகையை அறிமுகப்படுத்தினார்கள். இதில் பச்சை காலி பிளவர் மக்கா சோளம் கேரட் எண்னான ஸ்டார்ச்சு கலவை உப்பு போன்ற பொருட்களை வைத்து செய்து காட்டிய காய்கறி கூட்டு அருமை. இதை அருமையாக செய்து காட்டிய கடிகாசலம் மற்றும் வாணிக்கு. நன்றிகள் மலர்ச்சோலை நிகழ்ச்சியில் இந்திய தொலைகாட்சி விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தில் தகவல் தொழில் நூட்ப துறையில் 2004 2005ஆண்டில் 65 ஆயிரம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவித்த செய்தி மற்றும் மலர் அலங்காரம் அதுவும் 50 ஆயிரம் டாலர் செலவு போன்ற செய்தி மேலும் அரசியல் திறமை ஆளுமை திறைமை பெற்ற அரசியல் வாதியாக சோனியாகாந்திக்கு 3வது இடம் போன்ற செய்திகள் கேட்டேன் நன்றிகள் என்று சேலம் மாவட்டம் நேயர் ப மோகன சுந்தரம் தமது கடந்த டிசம்பர் திங்களில் கடிதங்களில் தெரிவித்துள்ளார்.