• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-05 20:39:09    
சூப்பர் நிலை நெல் புரவல்

cri

சீன அரசு உறுதிப்படுத்தியுள்ள சூப்பர் நெல் விணியோகப் பணி இவ்வாண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் முதலாவது ஆவணத்தில் தேர்க்கப்பட்டுள்ளது. வேளாண்மையின் முழுமையான உற்பத்தித் திறனை உயர்த்துவதில் இது எந்த அளவுக்கு செல்வாக்கை ஏற்படுத்தும்? இது பற்றி சீன அரசின் கலப்பு ரக நெல் திட்டத்தின் தொழில் நுட்ப ஆய்வு மையத்துக்குச் சீனாவின் சான்சா மாலை செய்தித் தாளைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் சென்று ஆய்வாளர் யுவென் லுன் பின்னை பேட்டி கண்டார். சீனா ஆராய்ந்து உருவாக்கியுள்ள சூப்பர் நெல்லை 2006ம் ஆண்டில் பெருமளவில் பயிருடலாம் என்று யுவென் லுன் பின் கூறியுள்ளார்.

ஒரு மூ நிலபரப்பில் 150 கிலோகிராம் சூப்பர் கலப்பு நெல் கூடுதலாக விளையும் என்று கணக்கில் பார்த்தால் 20 கோடி மூ நிலப்பரப்பில் இந்த கலப்பு நெல் பயிரிட்டால் ஆண்டு விளைச்சல் 3000 கோடி கிலோகிராம் அதிகரிக்கும். 7 கோடி மக்களை வாழவைக்க முடிம் என்று அவர் புன்னிவிவரம் காட்டி செய்தியாளரிடம் விளக்கி கூறினார்.

1997ம் ஆண்டில் "கலப்பு நெல் ரகத்தின் தந்தை" என்று போற்றப்பட்ட யுவென் லுன் பின் மேலும் உயர் இலக்கான உயர்ந்த விளைச்சல் ரக நெல் ஆராய்ச்சியில் மூழ்கியுள்ளார். அவருடைய தொழில் நுட்ப வழிகாட்டலின் கீழ் சீனாவின் சூப்பர் நெல் ரக பெருக்கம் உலகில் முன் வரிசையில் உள்ளது. 2004ம் ஆண்டில் சீனாவின் நூறு மூ நிலபரப்பிலான 11 மாதிரி ஆய்வு வயல்களில் நெல் விளைச்சல் சராசரியாக 800 கிலோகிராம் எட்டியுள்ளது. இவற்றில் 3 வயல்களின் விளைச்சல் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக 800 கிலோகிராமை தாண்டியுள்ளது. பெரும் நிலபரப்பில் பயிரிடும் சூப்பர் நெல் விளைச்சல் 800 கிலோகிராம் என்ற இரண்டாவது காலகட்ட குறிக்கோள் 2004ல் நிறைவேற்றப்பட்டதை இது காட்டியுள்ளது. முந்தைய திட்டத்தை விட ஒரு ஆண்டு முன்கூட்டியே சாதிக்கப்பட்டது. குறிப்பாக சீனாவின் புஃசியென் மாநிலத்தின் யு சி மாவட்டத்தில் 101,1 மூ நிலபரப்பிலுள்ள ஏ இலக்க மாதிரி வயலில் பயிரிடும் நெல்லின் விளைச்சல் 928.3 கிலோகிராமை எட்டியுள்ளது. சீனாவில் ஒரு மூ வயலில் 900 கிலோகிராம் சூப்பர் நெல் விளைச்சல் கிடைத்த முதலாவது நிலமாக வளர்ந்தது. சர்வதேச நெல் வட்டாரம் சீனாவின் சூப்பர் நெல்லை கீழை நாட்டு தேவதை என்று பாராட்டியுள்ளது.

தற்போது சீனா ஆராய்ந்து உருவாக்கிய சூப்பர் நெல் ரகங்கள் 12 ஆக உயர்ந்துள்ளது இவ்வாண்டின் பிற்பாதியில் இவை வகைப்படுத்தப்பட்டு சூப்பர் நெல்லின் இடம் உறுதிப்படுத்தப்படும். அதற்கு பின் தான் இந்த நெல் ரகம் பெருமளவில் பயிரிட வினியோகிக்க முடியும் என்று யுவென் லுன் பின் செய்தியாளரிடம் கூறினார். 2006ம் ஆண்டில் சீனாவின் சூப்பர் நெல் பெருமளவில் வினியோகிக்கப்படலாம் என்று யுவென் லுன் பின் குறிப்பிட்டுள்ளார்.