• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-05 21:41:55    
நேயர் நேரம்69

cri
இனி, எமது ஒலிபரப்பு பற்றிய நேயர்களின் பல்வேறு கருத்துக்களை காண்போம்.

--சீனா, மேற்கு பகுதியில் வாழும் மக்களுக்கு இலவச சட்ட அமைப்பு முறைகளை உருவாக்கியுள்ளதாக தங்களது செய்திகளில் அறிந்தேன். மேற்கு பகுதியில் வாழும் மக்கள் அடிப்படை வசதிகளை பெற சீனா ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக கல்வி அமைப்பு முறைகள் இலவசமாக அளிப்பதே இதற்கு எடுத்துக்காட்டாகும் என்கிறார் செந்தலை N.S.பாலமுரளி.

--புதிய நிகழ்ச்சி நிரல் அட்டை மற்றும் புதிய ஒலிபரப்பு அலை வரிசை பற்றி அறிய முடிந்தது. வாரந்தோறும் நேயர்நேரம் இடம்பெறுவது நேயர்களுக்கு கொண்டாட்டம் தான். இதன் மூலம் அதிக நேயர்கள் அதிக கடிதங்களை எழுத சீன வானொலி வவி வகுத்துள்ளது என்கிறார் பரசலூர் P.S.சேகர்.

--இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சியில் சீனாவில் காடு வளர்ப்பு பற்றி வான்மதி அருமையாக தொகுத்து வழங்கினார். மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி என்கிறார் நெய்வேலி A.M.சுப்ரமணியன்.

--சீன வானொலி நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக நேயர்கள் எழுதும் கடிதங்களுக்கு முன்னுரிமை தரும் சீன வானொலியின் பாங்கு மிகவும் சிறப்பு. உங்களுக்கு என் நன்றி கலந்த பாராட்டுக்கள் என்கிறார் கிருஷ்ணகிரி, R.மாதவராமன்.

--சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியைக் கேட்டேன். மலர்விழி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். காரணம் அவர் என்னை சங்ஹாய் மாநகருக்கு கூட்டி சென்று விட்டார். சின்ன தூண் மீது சாய்ந்து எல்லோரும் புகைப்படம் எடுப்பார்கள் என்று கூறியதைக் கேட்டு நானும் அந்த இடத்தில் நின்று புகைப்படம் எடுத்ததைப் போல் உணர்ந்தேன் என்கிறார் மறைமலைநகர் C.மல்லிகாதேவி.

--சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி மிகவும் அருமை, பாராட்டும் படி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம், ஒவ்வொரு நேயர்களின் வீட்டிலும் சீன வகை உணவும் சீன வகை சூப்பும் பெரிய அளவில் இடம்பிடித்துள்ளது என்பதில் சிறிதும் ஐய்யமில்லை என்கிறார் பாண்டமங்கலம் M.தியாகராஜன்.

--நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தமிழ்செல்வன் அவர்கள், திரு ஜி.பாரதியுடன் உரையாடியதைக் கேட்டேன். பாரதி அவர்கள் சீன வானொலி கேட்டு அவர் பயன் பெற்றதையும் தங்கள் நிலையத்தை பற்றிய குறிப்புகள் எடுத்து கூறியது மிகவும் பாராட்டத்தக்கது என்கிறார் சாத்தூர் C.மனோகரன்.