• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-08 11:01:28    
விளையாட்டுச் செய்திகள் (1)

cri

பிப்ரவரி 25ஆம் நாள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோக்கே, இக்கமிட்டியின் பல்வேறு குழுக்களின் புதிய தலைவர்களை நியமித்துள்ளார். அவர்களில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சீன உறுப்பினர் ஹொ சென் லியாங் பண்பாட்டு மற்றும் கல்விக் குழுத் தலைவர் பதவியை தொடர்ந்து வகிக்கின்றார்.

சர்வதேச பளுத் தூக்கல் சம்மேளனத்தின் தலைவர்கள் தேர்தல் மார்ச் திங்கள் 3ஆம் நாள் முதல் 4ஆம் நாள் வரை, துருக்கியிலுள்ள இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. சீனப் பளுத்தூக்கல் சங்கத்தின் தலைவர் மா வென் குவாங் சர்வதேச பளுத்தூக்கல் சம்மேளனத்தின் துணை தலைவர் பதவிக்காக போட்டியிடுகிறார். அதே வேளையில் இவ்வாண்டு சர்வதேச பளுத்தூக்கல் சம்மேளனத்தின் நூறாவது ஆண்டு நிறைவாகும். கடந்த 100 ஆண்டுகளில் உலகில் பத்து தலைசிறந்த விளையாட்டு வீரர், 2004ஆம் ஆண்டின் உலகில் தலைசிறந்த விளையாட்டு வரர்கள் என்ற பரிசுகளை சர்வதேச பளுத்தூக்கல் சம்மேளனம் இஸ்தான்புல் நகரில் வழங்கவுள்ளது. ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற லியூ ச்சுன் ஹொங்கும், சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற திங் மெய் யுவான்னும் இந்தப் பரிசுக்கான போட்டியில் உள்ளனர்.

2007ஆம் ஆண்டு கோடைகால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சின்னம், தலைப்பு, பொது நலனுக்கான பிரச்சாரப் படம் ஆகியவை பிப்ரவரி 27ஆம் நாள் சீனாவின் ஷாங்கை மாநகரில் தீர்மானிக்கப்பட்டுள்ளன. சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டியானது, மனவளர்ச்சி குறைந்த குழந்தைகள் மற்றும் முதியோருக்காக வந்தவருக்கு நடத்தப்படும் சர்வதேச விளையாட்டுப் போட்டியாகும். 2007ஆம் ஆண்டின் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அந்த ஆண்டின் அக்டோபர் திங்களில் ஷாங்கை மாநகரில் நடைபெறும்.

பிப்ரவரி 26ஆம் நாள் உலக கோப்பைக்கான மகளிர் வாள் வீச்சு போட்டியின் தென்கொரிய சுற்றில் சீன இளம் வீரர் ஹுவாங் ச்சியா லிங் 3ஆம் இடம் பெற்றார். மற்றொரு வீரர் சாங் லிலே 7ஆம் இடம் பெற்றார். இப்போட்டியில் 12 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 78 விளையாட்டு வீரர்கள் கலந்ந்துகொண்டனர்.

போட்டி பிப்ரவரி 26ஆம் நாள், 8வது குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளன. மொத்தம் 86 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்து 2700 விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் இப்போட்டியில் கலந்துகொள்கிறார்கள். சீனாவின் 68 விளையாட்டு வீரர்கள், உறைப்பனிச் சுறுக்கல், விரைவுப் பனிச்சறுக்கல், இசை நடன பனிச்சறுக்கல் உள்ளிட்ட 5 விளையாட்டுகளில் போட்டியிடுவர்.