
பிப்ரவரி 26ஆம் நாள் நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க கோப்பைக்கான ஜிம்னாஸ்ட்டிக்ஸ் போட்டியின் சரிசமநிலை கம்பி நிகழ்ச்சியில் சீன வீராங்கனை சாங் நான் 9.578 எனும் மொத்த மொத்தப் புள்ளிகள் எடுத்துச் சாம்பியன் பட்டம் பெற்றார். தவிர சீன வீராங்கனை லியூ ச்சுவான் சமநிலையற்ற கம்பிக்கள் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தையும் தரை உடல் பயிற்சி நிகழ்ச்சியில் 5ஆம் இடத்தையும் பெற்றார். சீன வீராங்கனை செங் பெய் HORSE VAULTING நிகழ்ச்சியில் 3ஆம் இடத்தையும் சரிசமநிலை கம்பி நிகழ்ச்சியில் 5ஆம் இடத்தையும் பெற்றார். சீன வீரர் லியு போ ஆடவருக்கான RING நிகழ்ச்சியில் 4ஆம் இடத்தையும் இணை கம்பி நிகழ்ச்சியில் 6ஆம் இடத்தையும் பெற்றார். ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் அமெரிக்கக் கோப்பைக்கான ஜிம்னாஸ்ட்டிக்ஸ் போட்டி, உலகில் ஏ பிரிவு போட்டிகளில் ஒன்றாகும்.

சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைபெற்ற 2005ஆம் ஆண்டுக்கான நடைப் பந்தய சாம்பியன்பட்டப் போட்டியின், ஆடவருக்கான 50 கிலோமீட்டர் போட்டியில் சீன வீரர்களான ஹான் யு செங், சிங் சு சாய், சௌ செங் லியாங் ஆகிய மூவரும் ஆசிய சாதனையை முறியடித்துள்ளனர். இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஹான் யு செங்கின் சாதனை, 3 மணி, 36 நிமிடம் 20 வினாடியாகும்.

மராதான் ஹாங்காங் சர்வதேச மராதான் போட்டி என்னும் நெடுந்தொலைவு ஓட்டம் பிர்பரவரி 27ஆம் நாள் நடைபெற்றது. மகளிர் பிரிவில் சீன வீராங்கனை தை யன் யன் 2 மணி 34 நிமிடம் 41 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார். சீனாவின் மற்றொரு வீராங்கனை மூன்றாம் இடம் பெற்றார். போட்டியில் கலந்துகொண்ட 4 பெண்களும் முதல் பத்து இடங்களில் உள்ளனர். ஆடவர் பிரிவில் கெனிய வீரர் ஒருவர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
பிப்ரவரி 26ஆம் நாள் பிரான்சில் நடைபெற்ற உள்ளரங்க தடகளப் போட்டியில் ரஷியாவின் புகழ்பெற்ற வீராங்கனை யெலேனா இசின்பாயேவா மகளிருக்கான கோலூன்றி உயரந் தாண்டும் போட்டியில் 4. 92 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலகச் சாதனையை உருவாக்கினார்.
சர்வதேச பூப்பந்து சம்மேளனம் பிப்ரவரி 24ஆம் நாள் புதிய முறை வரிசை பெயர் பட்டியலை வெளியிட்டது. சீன வீரர் லின் தான் ஆடவர் பிரிவின் முதல் இடத்தையும் சீன வீராங்கனை சாங் நிங் மகளிர் பிரிவின் முதலிடத்தையும் பெற்றனர். மகளிருக்கான இரட்டையர் பிரிவில் சீன வீராங்கனைகளான யாங் வெய், சாங் சியெ வென் ஜோடி முதலிடம் வகிக்கின்றது. ஆடவர் இரட்டையர் பிரிவிலும் ஆண் பெண் கலப்பு இரட்டையர் பிரிவிலும் டென்மார்க் வீரர் மற்றும் வீராங்கனைகள் முதலிடம் வகிக்கின்றனர்.
|