• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-08 16:27:20    
ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரை என

cri

பலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரை அடிக்கடி குறிப்பிடப்படுகின்றது. ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரை என்றால் என என்று சீனாவின் கான்சு மாநில நேயர் லியு மின் லியான் என்பவர் கேட்கிறார்.

"மேற்கு கரை மண்டலம்"என்பது தான் ஜோர்டான் ஆற்றின்

மேற்கு கரை எனப்படுகின்றது. 1947ல் ஐ.நாவில் பலஸ்தீனத்தில் தன்னாட்சி முறையை நடைமுறைப்படுத்துவது பற்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தில் பலஸ்தீன மக்கள் வாழும் பிரதேசமாக ஜார்தான் ஆற்றின் மேற்கு கரை பொதுவாக கருதப்படுகின்றது.

1948ல் நிகழ்ந்த அரபு-இஸ்ரேல் போரில் ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. 1967ம் ஆண்டு ஜுன் திங்களில் நிகழ்ந்த 3வது மத்தியக் கிழக்கு போரில் பெருமளவு அரபு நிலப் பகுதிகளை இஸ்ரேல் கைபற்றியது. ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரை ஜெரீசலேமின் அரபு மண்டலம், எகிப்தின் வசமுள்ள காசா பிரதேசம் ஆகியவை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் சேர்ந்தன. 1973ம் ஆண்டு அக்டோபர் திங்கள் நிகழ்ந்த 4வது மத்தியக் கிழக்கு போருக்கு பிறகு, தொடர்ந்து ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரை இஸ்ரேலின் கட்டுப்படாட்டிலேயே உள்ளது. தற்போது இந்த 4800 சதுர கிலோமீட்டர் பரப்புடைய மேற்கு கரை பிரதேசத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வாழ்கின்றனர். 1967ம் ஆண்டு முதல் இஸ்ரேல் அரசு யூதர் குடியிருப்புக்களை விரிவாக்குவதன் மூலம் பலஸ்தீனர்களின் நிலம், சொத்து, தண்ணீர் வளம் ஆகியவற்றை கைபற்றி பலஸ்தீனர்களை வீடுவாசலின்றி அகதிகளாகச் செல்லக் கட்டாயப்படுத்தியது. இதன் மூலம் மேற்கு கரையில் யூதர் மயமாக்க திட்டத்தை இஸ்ரேல் விரைவுப்படுத்தியுள்ளது. தவிரவும் மேற்கு கரைப் பிரதேசத்தில் இஸ்ரேல் தனது சட்ட அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி பலஸ்தீன மக்களை ஒதுக்கிவைத்து தொல்லைப் படுத்தியுள்ளது. காரணமின்றி அவர்களின் பள்ளிகள், மருத்துவ மனைகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டன.

இந்த மாதிரியான மேற்கு கரையை இணைக்கும் இஸ்ரேலின் கொள்கையை பலஸ்தீன மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அரபு நாடுகளும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கடுமையாக கண்டித்துள்ளன. ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில் சுதந்திர ஆட்சி உரிமை உடைய நாட்டை நிறுவும் உரிமை பலஸ்தீன மக்களுக்கு உண்டு என்று சர்வதேச சமூகமும் அரபு நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த கருத்தை எதிர்க்கின்றன.

நேயர்கள் இதைக் கேட்ட பின் ஏதாவது வினாகள் கேட்க வேண்டுமாயின் மின் அஞ்சல் அல்லது கடிதம் மூலம் கலையரசிக்கு தெரிவியுங்கள். முடிந்த அளவில் மகிழ்ச்சியுடன் விளக்கம் கூறுவோம்.