சீன தேசிய இன குடும்பம் நிகழ்ச்சியில் சர்வதேச ரீதியில் தேசிய இன நடவடிக்கைகளில் சீனாவின் ஆக்கப்பூர்வ செயல்பாடு பற்றிய கட்டுரையை கேட்டேன். உலகின் ஐந்து கண்டங்களிலும் சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்கள் உள்ளிட்ட 56 தேசிய இன மக்களின் பண்பாட்டு பரிமாற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து இடம் பெற சீன அரசு வழி செய்திருப்பது, உலக மக்கள் அவர்களின் பண்பாடு பழக்கவழக்கங்கள், நடையுடைபாவனைகள் ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கும், தேசிய இன மக்களின் தனித்துவத்தை பேணிக்காப்பதில் கொண்டுள்ள உண்மையான அக்கறையையும் எடுத்துக் கூட்டுவதாக அமைந்துள்ளது. சர்வதேச ரீதியினாலான தேசிய இன நடவடிக்கைகள் உலக மக்களிடையே சகோதரத்துவத்தையும் மனித நேயத்தையும் உருவாக்கும் என நம்பலாம் என்று மனமேடு எம் தேவராஜா தமது கடந்த நவம்பர் திங்களில் கடிதங்களில் தெரிவித்தார்.
2 10 04 அன்று சிறப்பு நிகழ்ச்சியாக ஒலிபரப்பட்ட சீன தேசியவிழா பற்றிய நிகழ்ச்சி மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும். சீன இந்திய நட்புறவில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று 84 அன்னிய நாட்டு நிபுணர்கள் உடன், சீனாவின் விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற திரு கடிகாசலம் மிகவும் பாராட்டுக்குரியவர். திரு கடிகாசலம் அவர்களின் சிறப்பு பேட்டியும் அருமை. 13 ஆண்டுகால பெய்சிங் நகர வளர்ச்சி பற்றிய அவரது உரை குறிப்பிடத்தக்கது. திரு கடிகாசலத்தோடு சேர்ந்து 2008 சீன ஒலிம்பிக்ஸ் வெற்றிபெற நானும் மனதார வாழ்த்துகிறேன் என்று நாமக்கல் ஜெ கல்பனா தமது கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்.
11 11 04அன்று ஒலிபரப்பிய சீனாவில் வறுமை ஒழிப்பு திட்டம் பற்றிய தமிழ் செல்வம் அவர்களின் கட்டுரை மிக அருமை.
சீனாவில் தற்போது 2 கோடியே 90 லட்சம் மக்கள் வறுமையில் சீனாவில் உள்ளனர். ஆனால் 2010ம் ஆண்டிற்குள் சீனாவில் வறுமையில் வாழும் மக்கள் எவருமே இருக்க மாட்டார்கள் என்ற சீன அரசின் திட்டம் உலக அதிசயங்களில் ஒன்றாகும். ஏனெனில் உலகில் மிகப் பெரிய பணக்கார நாடான அமெரிக்கா கூட இந்த மாதரி அரிய திட்டத்தை முன்வைக்கவில்லை என்று நாகர்கோவில் நேயர் பிரின்ஸ் ராபர்ட் சிங் கடந்த நவம்பர் திங்கள் எழுதிய கடிதங்களில் கூறியுள்ளார்.
|