• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-08 12:30:31    
நேயர் நேரம்71

cri
சீன சமூக வாழ்வு பகுதியில் கிராமபுரத்திள்ள அமைந்துல்ல ஒரு ஊசி பயிற்சி பள்ளி பற்றியும் ஊசி பயிற்சி எவ்வாறு கற்றுப்படுகிறது என்றும் மேலும் பல எண்ணற்ற தகவல்களையும் அறிந்து கொண்டேன். மக்கள் சீனம் பகுதியில் ஊசி நகரம் பற்றியும் அதன் அடிப்படை வசதி பற்றியும் மேலும்ஊசி நகரம் இப்போது எப்படி செயல்படுகிறது என்றும் மேலும் ஊசி நகரம் செயல்பாடுகள் இப்போது எப்படி செயல்படுகிறது என்றும் அறிந்துக் கொண்டேன். சீன பண்பாடு பகுதியில் தூய ஒலி பற்றியும் பாலஸ்தீன அதிபர்கள் உயிருடன் இருக்கும் போதே தங்களுக்கு கல்லறையை எவ்வாறு முன்னாடியே தேர்வு செய்தார்கள் என்றும் மேலும் பாலஸ்தீன பற்றி பல செய்திகளையும் அறிந்து கொண்டேன். நன்றிகள் என்று கண்டமங்கலம் நேயர் எ முஜூபுர் ரஹ்மான் கடந்த நவம்பர் திங்கள் எழுதிய கடிதங்களில் தெரிவித்தார். 18 11 04 அன்று நலவாழ்வு நிகழ்ச்சியில் பல மருத்துவக் குறிப்புகளையும் அதிகாலை உணவு நேரம் தவறாமல் சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் இதய நோய் எதுவும் நமக்கு வராது என்பதைக் கேட்டு நான் மிகவும் பயன் அடைந்தேன் 22 11 2004 அன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் வெள்ளரி கிச்சடி சமையல் குறிப்பு மிக அருமையாக இருந்தது. எளிய முறையிலும் செலவு குறைவாகவும் உள்ள கிச்சடியை நானும் சமைத்து பயன் அடைந்தேன். இந்த நிகழ்ச்சி வாராவாரம் வித்தியசமான சீன உணவுகளை எங்களுக்கு வழங்குவது பாராட்டும்படி உள்ளது நன்றி என்று சாத்தூர் சி மனோகரன் தமது நவம்பர் திங்கள் கடிதங்களில் கூறிகிறார். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் பல பொது அறிவுள்ள தகவல்களை தெரிந்து கொண்போம். குறிப்பாக நோயை தீர்க்கும் வெங்காயம் என்ற செய்திமில் நீரழிவு நோய் புற்று நோய்க்கு வெங்காயம் சிறந்தது என்பது கேட்டு மகிழ்ந்தோம் மேலும் தாழ்வு மனப்பான்மை பற்றியும் பலவீனத்தை போக்குவதற்குரிய காரணங்கள் பற்றியும் தெரிந்து கொண்டதோடு உறுதி எடுத்துக் கொண்டோம் தாழ்வு மனப்பான்மை இருக்க கூட்டாது என்று பெரம்பலூர் மாவட்டம் சு கலைவாணன்ராதிகா தமது கடந்த நவம்பர் திங்களின் கடிதங்களில் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் திங்கள் 15ம் நாள் செய்தித் தொகுப்பில் சர்வதேச கூட்டமைப்பில் சீனாவின் வாக்குறுதி பற்றி அறிய தந்தீர்கள். சீன தனது வாக்குறுதியை இதுவரை மீறியது இல்லை எனவே உலக நாடுகள் சீனாவை மனப்பூர்வமாக நம்பலாம் என்பதை அறிந்து கொண்டோம் நன்றி என்று மீனாட்சிபாளையம் கா அருண் தமது கடிதங்களில் குறிப்பிட்டார்.