• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-10 17:12:50    
கிருமிகள் பற்களில் கவனம்

cri
எவ்வாறு தோல் பாதுகாப்பளிக்கிறதோ அதே போல் பற்களுக்கு டென்டைன் என்னும் ஒருவகை எனாமல் பற்களைப் பாதுகாக்கிறது. இந்த எனாமலை லாக்டிக் எமிலம் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து விடுகின்றது. பின்னர், கிருமிகள் பற்களில் அமிலத்தின் துணையுடன் துளையை ஏற்படுத்தி உட்சென்று பல்லை சொத்தையாக்கிவிடுகின்றது.

குழந்தைக்கு 2 வயது நிறைவடையும் போது இரண்டாவது கடைவாய்ப் பற்கள் நான்கைத் தவிர, இதர 16 பற்களுமே முளைத்து சீராகக் காட்சி அளிக்கும். குழந்தைக்கென விற்கப்படும் மிருதுவான பல் துலக்கும் பிரஷ் ஒன்றை குழந்தைக்கு இந்த வயதில் வாங்கிக் கொடுக்க வேண்டும். துவக்கத்தில் பிரஷ் கொண்டு பர்களைத் துலக்கும் முறையை குழந்தைக்கு கற்றுக் கொடுக்கவும் வேண்டும். பல் துலக்குவது பற்களின் மேலும் அதைச் சுற்றிலும் காணப்படும் உணவுத் துண்டுகளையும் இதர சிறு துகள்களையும் அகற்றுவதற்காகத் தான். ஆகவே, பற்களை வீணாகத் தேய்க்க வேண்டியது இல்லை. பிரஷ் கொண்டு சுத்தம் செய்து முடித்தபின் உள்ளும் வெளியும் ஆள்காட்டி விரலால் பல் ஈறுகளை ஒரு தடவை அழுத்தித் தேய்த்து வாய் கொப்பளிக்க கற்றுக் கொடுத்தால் நல்லது. சாப்பிட்டு முடித்த ஒவ்வொரு தடவையும் இவ்வாறு பற்களை சுத்தம் செய்து கொள்வதே நல்லது. ஆனாலும் இரவு உணவிற்குப் பின் கண்டிப்பாக ஒரு முறை பல் துலக்கியே ஆக வேண்டும்.

மூன்று வயதிலிருந்து 6 திங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் குழந்தைகளின் பற்களை ஆய்வு செய்து கொள்வது நல்லது. சில பெற்றோர்கள் பற்கள் கெட்டுப் போனால் என்ன இவை விழப்போகும் பற்கள் தானே என அலட்சியமாக இருப்பாப்கள். இது தவறு, பற்கள் கெட்டுவிட்டால் கிருமிகள் அதிகமாகி மேலும் பரவி ஈறுகள் தாடைகள் ஆகியவற்றை கெடுத்து விடுகின்றன. இதனால் நிரந்தரப் பற்கள் ஒழுங்காக வெளிவர இயலாமல் தாறுமாறாக முளைக்க ஆரம்பிக்கின்றன. ஈறுகள் முன்பே அரிக்கப்பட்டுவிட்டதால் இப்பற்களுக்கு போதிய பலம் கிடைப்பதில்லை.

குழந்தைக்கு ஆறு வயதிலிருந்து நிரந்தரப் பற்கள் வெளிவர ஆரம்பிக்கின்றன. இவையும் பால்பற்களைப் போலவே அதே வரிசையில் முளைக்கின்றன. ஆறு வயதில் விஸ்டம் பற்கள் என அழைக்கப்படும் கடைப்பற்கள் நான்கைத் தவிர இதர 28 பற்களும் வெளிவர 12 முதல் 14 வயதாகிவிடும். விஸ்டம் பற்கள் நான்கும் பதினெட்டு வயதிலும் வெளிவரலாம். அல்லது வெளிவராமலேயே இருந்து விடலாம். நிரந்தரப் பற்கள் வெளிவரும் போது சில நெருக்கமாகவும் சில மாறு கோணங்களிலும் முளைக்கக் கூடும். 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பற்கள் சீராக வளர சிகிச்சை அளிக்க வேண்டும். பற்களில் ஏற்படும் குறைகளை அவ்வப்போது கவனித்து விட்டால் பற்கள் நல்ல முறையில் அமைந்து விடுகின்றன.