• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-10 17:12:50    
7 மேலை நாடுகளை விட அதிகப் பங்கு ஆற்றியுள்ள சீனா

cri
பெப்ரவரி 21ம் நாள் பிரிட்டிஷ் நிதி அமைச்சர் கோர்டன் பிரெளன் சீன சமூக அறிவியல் கழகத்தில் சொற்பொழிவு ஆற்றினார். சீனாவின் வளர்ச்சி தொழில் மயமான மேலை நாடுகளைப் பொறுத்தவரை அச்சுறுத்தலுக்கு பதிலாக ஒரு வாய்ப்பாக திகழ்கின்றது என்று அவர் கூறினார். 8 நாடுகள் குழுவின் உறுப்பினர்கள் சீனாவுடன் இணைந்து ஒத்துழைத்து உலகளவில் பொருளாதாரத்தை எதிர்நோக்கும் சவானல் எதிர்த்துப் போராட வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார். பிரிட்டிஷ் நிறுவனங்களைப் பொறுத்தவரை சீனா மாபெரும் சந்தையாகும். இங்கே பிரிட்டிஷ் நிதி அமைச்சர் என்ற முறையில் மட்டுமல்ல சர்வதேச நிதிக் கமிட்டித் தலைவர் என்ற முறையிலும் உலக பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்கு ஆற்றுவதற்கு ஆதரவளித்துள்ளேன் என்றார் பிரெளன். உலகில் துணி துவைக்கும் இயங்திரங்களில் 25 விழுக்காடு சீனாவால் தயாரிக்கப்பட்டது. தொலைகாட்சி பெட்டிகளில் 30 விழுக்காடும், மின்சார குக்கரில் 40 விழுக்காடும், கேமரா உற்பத்தியில் 50 விழுக்காடும், படி எடுக்கும் இயங்திரங்களில் 70 விழுக்காடும், விளையாட்டு பொம்மைகளில் 90 விழுக்காடும் சீனாவால் தயாரிக்கப்பட்டன. சீனா ஏற்றுமதி செய்த வணிக பொருட்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதால், சீனாவினால் பொருளாதார அச்சுறுத்தல் என்று வளர்ச்சியடைந்த நாடுகள் பல கருதுகின்றன. சீனா மீது வர்த்தகத் தடை விதிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்கின்றது. யுகத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி சீர்திருத்தத்தை எதிர்த்து நிற்கும் இந்த முயற்சி எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று கூறிய பிரெளன். கடந்த சில ஆண்டுகளாக சீனா உலகப் பொருளாதாரத்துக்கு ஆற்றிய பங்கு நிராகரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். மேலை நாடுகளின் பொருளாதாரம் தாழ்ந்த நிலையில் இருந்த போது சீனா உலக பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்காக தநது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் 8 மேலை நாடுகளை விட சீனா உலக பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு பெரிதாகியுள்ளது. உண்மையில் சீனாவின் பங்கு இல்லாவிட்டால் உலக வர்த்தக அமைப்புக்கு பற்றாக்குறை ஏற்படும். உலகை நிதானப்படுத்தும் முக்கிய பொருளாதார அமைப்பான சீனாவின் பங்களிப்பில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் பிரெளன். சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பொருளாதா மற்றும் வர்த்தக உறவு சீனா மீது நம்பிக்கை ஏற்படுவதற்கான காரணமாகும். சீனப் பிரிட்டிஷ் கூட்டாளி உறவு தினந்தோறும் வலுப்பட்டு ஆழமாகியுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் 4000 கூட்டு முதலீட்டு தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளில் பிரிட்டன் சீனாவில் மிக கூடுதலாக முதலீடு செய்துள்ள நாடாகும். இரு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற வர்த்தகம் கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதிகரிப்பு விகிதம் 230 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று பிரிட்டிஷ் நிதி அமைச்சர் கோர்டன் பிரெளன் குறிப்பிட்டார்.