 வணக்கம் நேயர்களே, நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்று இரண்டாம் பாடத்தை படிக்க துங்வங்குகின்றோம்.
முதலில் கடந்த முறையில் படித்தறிந்த உரையாடலை மீண்டும் பார்ப்போம்.
你好吗?
நலமா?
我很好, 你呢?
நலம் தான், நீங்கள் எப்படி?
我也很好, 谢谢.
நானும் நலம், நன்றி!
你工作忙吗?
உங்கள் வேலை அதிகமா?
我工作很忙, 你怎么样?
மிகவும் அதிகம், நீங்களோ?
我也很忙.
எனக்கும் வேலை அதிகம்.
你身体好吗?
உங்கள் உடல் எப்படி?
我身体很好, 你呢?
உடல் நலம் தான், நீங்கள்?
你爸爸, 妈妈, 身体怎么样?
உங்கள் அப்பா, அம்மா உடல் எப்படி?
他们也很好, 谢谢你! 再见!
அவர்களும் நலம் தான், மிக்க நன்றி! வணக்கம்!
இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளூங்கள்.
இந்த உரையாடலில் 工作, 爸爸, 妈妈, 忙 ஆகிய நான்கு புதிய சொற்களை படித்தறிந்துள்ளோம். நினைவில் இருக்கிறதா. இங்கு மீண்டும் ஒரு முறை விளக்கிச் சொல்லுகின்றேன். 工作 என்றால் வேலை, 爸爸, என்றால் அப்பா, 妈妈 என்றால் அம்மா, 忙 என்றால் வேலை அதிகம்.
இப்பொழுது புதிய பாடத்தைத் துவக்குகின்றோம். 介绍 அதாவது அறிமுகம் என்பது இப்பாடத்தின் தலைப்பாகும்.
முதலில் ஒரு வாக்கியம் கேலுங்கள்,
请问, 你贵姓? தங்களின் குடும்பப் பெயர் என்ன? என்பது, இந்த வாக்கியத்தின் தமிழாக்கம் ஆகும்.
ஒருவரின் குடும்பப் பெயரைக் கேட்கும் போது, இப்படி சொல்ல வேண்டும். பதில் சொல்லும் போது, முதலில்我姓 என்று சொல்ல வேண்டும். இதற்கு பின் தங்களின் குடும்ப பெயரை சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 我姓张 என்ற வாக்கியத்தின் தமிழாக்கம், எனது குடும்பப் பெயர் சாங் என்பதாகும்.
அடுத்து ஒரு உரையாடலைக் கேளுங்கள்.
请问, 您贵姓?
உங்கள் குடும்பப் பெயர் என்ன
我姓张.
எனது குடும்பப் பெயர் சாங்.
您好,张先生!
வணக்கம், திரு சாங்!
நேயர்கள், இன்று நாங்கள் ஒரு புதிய பாடத்தைத் துவக்கியுள்ளோம். சில புதிய சொற்களை மனதில் பதிந்திருக்க வேண்டும் என்று போக போக சொற்களை அதிகமாக குவிந்திருக்கும். ஆகவே, புதிய சொற்களை படிக்கும் போது, பழைய சொற்களையும் அடிக்கடி பார்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். வணக்கம்.
|