சிங்காய்-திபெத் இருப்புப்பாதை, உலகில் உயரமான பீடபூமி சுற்றுலாத் தலமாக மாறக்கூடும் என்று மேற்கு சீனாவின் சிங் காய் மாநிலத்து Xi Ning நகரின் மேயர் Wang Xiao Qing இன்று பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார். சிங்காய்-திபெத் இருப்புப்பாதை, உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் உள்ள, மிக நீளமான பீடபூமி இருப்புப்பாதையாகும். வடக்கில் Xi Ning நகர் முதல் தெற்கில் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லாசா நகர் வரையான இந்த இருப்புப்பாதையின் மொத்த நீளம், 1142 கிலோமீட்டராகும். தற்போது, இதன் அடிப்படை திட்டப்பணிகள் பெரும்பாலும் நிறைவேறியுள்ளன. 2007ஆம் ஆண்டில், இது போக்குவரத்துக்கு இது திறந்து விடப்படும்.
|