• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-11 19:01:52    
யுவான் சியெள எனும் இனிப்பு

cri

வசந்த விழாவின் கடைசிநாள் விளக்குத் திருவிழா எனப்படுகிறது. தீபாவளி போல வீடுகளில் விளக்குகளைத் தொங்கவிட்டு மக்கள் கொண்டாடுகின்றனர். விளக்குத் திருவிழா தினத்தில் இரவில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து இந்த வெள்ளை இனிப்பு உருண்டையைத் தின்கிறார்கள். இந்த இனிப்பின் பெயரால் யுவான் சியெள திருவிழா என்றும் இதை அழைக்கிறார்கள்.

இந்த இனிப்பின் தயாரிப்பு முறை கொஞ்சம் கஷ்டமானது. இருந்த போதிலும், சுவைப்பதற்கு நன்றாக இருக்கும். நேயர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். முதலில் தேவைப்படும் பொருட்களை எடுத்துவைப்போம்.

பசை அரிசி மாவு, 400 கிராம்—இதை, ரப்பர் அரிசி என்று, தமிழ்நாட்டில் சொல்வார்கள்.

கோதுமை மாவு, 100 கிராம்

எள்ளு, 30 கிராம்

வாதுமை, 30 கிராம்

சர்க்கரை, 300 கிராம்

எண்ணெய் 150 கிராம்

இனி, உருண்டைக்கு உள்ளே வைக்கப்படும். முதலில், எள்ளு, வாதுமை பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை, பொடி செய்து மாவு போல அரைக்கணும். இதற்கு கொஞ்சம் நேரமாகும். பிறகு, அதில் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக கிளறவும். வாதுமை பருப்பு கிடைக்க விட்டால், வேறு கொட்டைகளைப் பயன்படுத்தலாம்.

பழம், CHOCOLATE, தேங்காய்த்துருவல் முதலியவற்றையும் பயன்படுத்தலாம். இந்தப் பூரணம் கிளறி எடுத்து பிறகு, இரண்டு சதுர செண்டிமீட்டர் துண்டுகளாக போட வேண்டும்.

அப்புறம், பசை அரிசி மாவையும் கோதுமை மாவையும் கலந்து நீரை சேர்த்து, நன்றாக பிசைந்து, 30 நிமிடம் ஊறவிட வேண்டும். பின்பு, பிசைந்த மாவை, 30 கிராம் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

அடுத்து, ஏற்கனவே செய்யப்பட்ட பூரணத்தை, மாவு உருண்டைகளில் வைப்பது.

 

இனி, ஒவ்வொரு சிறிய மாவு உருண்டையை கையால் வடை போல தட்ட வேண்டும். மாவு வடையில் ஒரு பூரணத் துண்டை வைத்து, உருண்டை பிடிக்க வேண்டும். பந்து வடிவமாக தயாரிக்கவும்.

வெள்ளை உருண்டைகள் ரசகுல்லா போல தயாராகி விட்டது.

இனி, வாணலியை அடுப்பின் மீது ஏற்றும். நீரை வாணலியில் விட்டு கொதிக்கவிட வேண்டும். நீர் சொதித்த பிறகு, யுவான் சியெள உருண்டைகளை அதில் போட்டு, வேக வைக்கவும்.

யுவான் சியெள வாணலில் வெந்ததும் 2 முறை குறிர் நீர் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு முறை ஊற்றும் போதும், அரை பாத்திரம் குளிர் நீரை ஊற்ற வேண்டும். கடைசியாக, யுவான் சியெள ஊற்றிய நீருக்கு மேலே மிதந்து வரும். அந்த நிலையில் இரண்டு நிமிடமாவது வேக விட வேண்டும்.

அடுத்த முறை, வசந்த காய்கறி ரோ செய்யலாம். ஆகையால், மாவு, முட்டை, காளான், வெங்காயம், கேரட் முதலியவற்றை முன்கூட்டியே தயாராக எடுத்துவைத்திருங்கள்.