
Silun என்ற திபெத் இனத்தவர், திபெத் இன இசை நாடகக் கலையில் மூழ்கித் தினைத்தவர். 12 வயதிலிருந்தே இந்நாடகத்தைக் கற்றுக் கொள்ளத் துவங்கினார். இன்று, லாசா நகரிலுள்ள திபெத் இன இசை நாடகக் குழுவின் தலைவராகியுள்ளார். நாடகத்தைக் கற்றுக்கொள்வது பற்றி மகிழ்ச்சியுடன் அவர் கூறியதாவது:
"படிப்பின் போது, ஆசிரியர் எனக்குக் கண்டிப்பான நிபந்தனைகளை விதித்தார். காலையிலே சாதகம் செய்ய வேண்டும். இது மட்டுமல்ல, திபெத் இன மொழியிலான நாடக வரிகளை மனப்பாடம் செய்ய வேண்டும்" என்றார் அவர்.

தம் ஆசிரியரிடமிருந்து, அவர், பாடும் திறனையும், உடல்நடிப்பையும் இதர பாரம்பரிய நாடக கலை பற்றிய பாடங்களையும் கற்றுத்தேர்ந்தார். அவருடைய தாய், அக்கா, தங்கை, மனைவி அனைவரும் திபெத் இன இசை நாடக நாடகங்களில் நடிக்க மிகவும் விரும்புகின்றனர். அவரது அக்கா, தங்கை, மனைவி ஆகியோர், திபெத் இன இசை நாடகக் குழுவின் முதுகெலும்பாக விளங்குகின்றனர்.
Silun இருக்கின்ற திபெத் இன இசை நாடக குழு, முக்கியமாக, பிரபலமான பாரம்பரிய திபெத் இன இசை நாடகங்களை அரங்கேற்றுகின்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முந்திய திபெத் இன இசை நாடகங்களின் தனிச்சிறப்பியல்பை இவை வெளிப்படுத்துகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் திங்களில் திபெத் இன மக்கள் Xundun எனும் விழாவைக் கொண்டாடும் போதெல்லாம், இந்த நாடகக் குழு, கிராமப்புறங்களுக்குச் சென்று, விவசாயிகளுக்கும் இடையர்களுக்கும் இலவசமாக அரங்கேற்றி விழா நாட்களில் திபெத் இனத்தவர்களுக்கு மகிழ்வை அளிக்கின்றது.
1 2 3 4
|