• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-15 11:22:53    
கடந்த வாரத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் (1)

cri

சர்வதேச பனிச்சறுக்கல் ஒன்றியம் ஏறபாடு செய்யும் 2005ஆம் ஆண்டு உலக குறுகிய பாதை விரைவு பனிச்சறுக்கல் சாம்பியன் பட்டம் போட்டி 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 11ஆம் நாள் பெய்சிங்கில் துவங்கியது. இன்று நடைபெற்ற 1500 மீட்டர் பனிச்சறுக்கல் போட்டியியில் சீன வீராங்கனை வாங் மொங் வெண்கல பதக்கம் பெற்றார். ஆடவருக்கான 1000மீட்டர் விரைவுப் பனிச்சறுக்கல் போட்டியில் சீன வீரர் லீ ஜியா ஜுன் வெண்கல பதக்கம் பெற்றார்.  சீன ஆடவர் அணி பெற்ற ஒரே ஒரு பதக்கம் இதுவாகும்.

மார்ச்சி 12ஆம் நாள் நடைபெற்ற 500 மீட்டர் விரைவுச் சறுக்கல் போட்டியில் சீன வீராங்கனை யாங் யாங் சாம்பியன் பட்டம் பெற்றார். வாங் மொங் இரண்டாம் இடத்தையும் பூ தின் யு மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 1993ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய போட்டியை சீனா நடத்துவது இதுவே இரண்டாம் முறையாகும். 2006இல் துலிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முந்திய மிக முக்கிய போட்டியாக இது விளங்குவதால், பல்வேறு நாடுகள் மிக சிறந்த விளையாட்டு வீரர்களை அனுப்பியுள்ளன.

2005ஆம் ஆண்டு உலக பூப்பந்து போட்டியின் இரண்டாம் சுற்றான-ஜெர்மன் பூப்பந்து ஒப்பந் போட்டி 5ஆம் நாள் நிறைவடைந்தது. சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இடம்பெறும் சீன அணி, ஆண் பெண் கலப்பு இரட்டையர் போட்டி தவிர்ந்த அனைத்து போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனப் பூப்பந்து அணி கலந்துகொண்ட சர்வதேச போட்டிகளில் சீன அணி பெற்ற சாம்பியன் பட்ட எண்ணிக்கை, இதர நாடுகள் பெற்ற சாம்பியன் பட்டங்களின் மொத்த எண்ணிக்கையைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

8வது குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 5ஆம் நாள் ஜப்பானில் நிறைவடைந்தது. உலகின் 68 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1700க்கும் அதிகாமான மனவளர்ச்சி குறைந்த விளையாட்டு வீரர்கள் இதில் கலந்துகொண்டனர். சீனப் பிரதிநிதிக் குழு 5 விளையாட்டுக்களில் கலந்துகொண்டு, 37 தங்கம், 22 வெள்ளி மற்றும் 16 வெண்கல பதக்கங்களை பெற்றனர். 9வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் ஷாங்கை மாநகரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர் லியூ சியாங், மார்ச் திங்கள் முதல் தியன்ச்சின் மாநகரில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டியின் ஆடவருக்கான 60 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். போட்டியில் கலந்துகொண்ட 8 ஆசிய விளையாட்டு அணிகளில் சீன அணி மிகவும் சிறப்பாக விளையாடினர். அவர்கள் மொத்தம் 22 விளையாட்டுக்களில் 16 தங்கப் பதக்கம் பெற்றது.