2005ஆம் ஆண்டு உலக குறுகியப் பாதை விரைவு பனிச்சறுக்கல் சாம்பியன் பட்டப் போட்டியின் குழு போட்டி 6 ஆம் நாள் தென் கொரியாவில் நிறைவடைந்தது. சீன மகளிர் அணி இரண்டாம் இடத்தையும் சீன ஆடவர் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன. 500 மீட்டர் விரைவுச் சறுக்கல் 1000 மீட்டர் விரைவுச் சறுக்கல் 3000 மீட்டர் தொடர் சறுக்கல் ஆகிய மூன்று போட்டிகளின் மொத்த சாதனையில், கனடா ஆடவர் அணியும் தென் கொரிய மகளிர் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன.

சர்வதேச வாள் வீச்சு சம்மேளனம் ஏற்பாடு செய்த உலக கோப்பைக்கான வாள் வீச்சு போட்டியின் ஆடவர் குழு போட்டி 6 ஆம் நாள் ஷாங்கையில் நிறைவடைந்தது. சராசரியாக 22 வயதுக்குள்ளான இளைஞர்கள் இடம்பெறும் சீன அணி 34-45 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு இரண்டாம் இடம் பெற்றது. ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு உருவாகிய சீன அணி பெற்றுள்ள மிக சிறந்த சாதனை இதுவாகும்.

துருக்கியின் இஸ்டாம்புல் நகரில் நடைபெற்ற சர்வதேச பளு தூக்கல் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் சீனப் பளு தூக்கல் சங்கத்தின் தலைவர் மா வேன்குவாங் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச சம்மேளனத்தின் தலைமை பீடத்தில் சீன பளு தூக்கல் சங்கத்தின் பிரதிநிதி நுழைந்துள்ளது என்று இது பொருட்படுகின்றது. மார்ச் 3ஆம் நாள் முதல் 4ஆம் நாள் வரை, சர்வதேச சம்மேளனம் இஸ்டாம்புலில் அதன் நூறாண்டு கொண்டாட்டத்தை நடத்தியது. 14 பளு தூக்கல் வீரர்கள் கடந்த 100 ஆண்டுகளில் மிக சிறந்த விளையாட்டு வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சீன மகளிர் பளு தூக்கல் வீராங்கனைகளான திங் மெய் யுவானும் லியூ ச்சுன் ஹொங்கும் இந்த புகழை பெற்றுள்ளனர்.
6ஆம் நாள் நிறைவடைந்த உலக F1 கார் ஓட்டப் போட்டியின் ஆஸ்திரேலிய சுற்றில் RENAULT அணியின் இத்தாலி வீரர் FISICHELLA ஒரு மணி, 24 நிமிடம் 17.336 வினாடி என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். FARALLY அணியின் ஜெர்மன் வீரர் சுமாஹ் விபத்து காரணமாக போட்டியிலிருந்து விலகினார். மாராதன் மூன்றாவது சியாமென் சர்வதேச மாராதன் எனும் நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி மார்ச் 26ஆம் நாள் தென் கிழக்கு சீனாவிலுள்ள சியாமென் நகரில் நடைபெறும். இது பெய்சிங்கில் ஆண்டுதோறும் நடைபெறும் மாராதன் போட்டியுடன் இணைந்து சீனாவில் இரண்டு மாபெரும் மாராதன் போட்டிகளாக விளங்குகின்றன.
|