• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-16 14:57:24    
தமிழ் மூலம் சீனம் பாடம் 10

cri
வணக்கம் நேயர்களே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்தித்துள்ளோம். நலமா, இன்று இரண்டாம் பாடத்தின் இரண்டாம் பகுதியை படிக்கின்றோம்.

முதலில் கடந்த முறையில் படித்தறிந்த உரையாடலை மீண்டும் பார்ப்போம்.

请问, 您贵姓? உங்கள் குடும்பப் பெயர் என்ன?

我姓张! எனது குடும்ப பெயர் சாங்.

您好,张先生! வணக்கம் திரு சாங்!

您贵姓 என்ற வாக்கியத்தில், மரியாதை காட்டும் வகையில் கண்டிப்பாக 您 என்று சொல்ல வேண்டும் 你 என்று சொல்லக் கூடாது. அதாவது 你贵姓 என்று எப்பொழுதும் சொல்லுவது இல்லை.

我姓张 என்ற வாக்கியத்திலுள்ள 我姓 என்றால் எனது குடும்பப் பெயர் என்று பொருள். இதற்கு பின், குடும்பப் பெயரைச் சேர்க்க வேண்டும்.

先生 என்றால் திரு என்று பொருள், பொதுவாக, குடும்பப் பெயருக்குப் பின் வரும்。 எடுத்துக்காட்டாக 张先生. ஆனால் தமிழ் வழக்கம் படி, திரு சாங் என்று தான் சொல்ல வேண்டும், சாங் திரு என்று சொல்லுவது இல்லை அல்லவா.

இப்பொழுது இந்த உரையாடலை மீண்டும் கேளுங்கள்.

அடுத்து, ஒரு புதிய வாக்கியத்தை படிக்கின்றோம்.

你叫什么名字? உங்கள் பெயர் என்ன? அல்லது, நீங்கள் என்ன பெயர் அழைக்கப்படுகிறீர்கள்?

இங்கு, 叫 என்றால் அழைக்கப்படுவது என்று பொருள். 什么 என்றால் என்ன என்று பொருள், 名字 என்றால், பெயர் என்று பொருள்.

இப்பொழுது ஒரு உரையாடலைக் கேளுங்கள்

请问,你叫什么名字?

我叫李红。

你好,李小姐,认识你我很高兴!

இந்த உரையாடலின் தமிழாக்கம் வருமாறு.

உங்கள் பெயர் என்ன?

என் பெயர் லீ ஹொங்.

வணக்கம் செல்வி லீ. உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இங்கு, 小姐 என்றால், செல்வி என்பது பொருள். பொதுவாக குடும்பப் பெயருக்கு பின் வரும். எடுத்துக்காட்டாக, 李小姐, 王小姐,இங்கு லீ, சாங் என்பன குடும்ப பெயராகும்.

இப்பொழுது இந்த உரையாடலை மீண்டும் கேளுங்கள். நேயர்களே, இன்று நாம் புதிய பாடத்தைக் கற்றுக் கொண்டுள்ளோம். புரிந்ததா? பாடத்துக்குப் பின் அதிக முறை பயற்சி செய்யுங்கள். கடந்த முறை, நமது அன்பு நேயர் எம் தியாகராஜன் அவர்களின் முதலாவது பாடம் பற்றிய விளக்கத்தை ஒலிபரப்பினோம். நீங்கள் கேட்டு புரிந்ததா? நீங்களும் ஒரு முறை முயற்சி செய்ய விருப்பமா? விரும்பினால், தொலைபேசிமூலம் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள், ஆனால் நீங்கள் கண்டிப்பாக செவ்வனே தயாராக இருக்க வேண்டும்.