• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-15 22:35:04    
குழந்தைகளிடையில் எதிர்பாராத விபத்து

cri

சீன வானொலி நிலையம். வணக்கம் நேயர்களே. அண்மை காலத்தில் சீனாவில் குழந்தைகளின் எதிர்பாராத விபத்துக்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. இது சமூக பல்வேறு வட்டாரங்களின் கவனத்தை மேன்மேலும் ஈர்த்துள்ளது.

சமூக பொருளாதார வளர்ச்சியுடன் சீன மக்களின் மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்க்கை நிலை பெரிதும் உயர்ந்துள்ளது. முன்பு குழந்தைகளின் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் கடுமையான தொற்று நோய்கள் சத்துணவு பற்றாக்குறை முதலியவை முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் எத்ரிபாராத விபத்துக்கள் குழந்தைகளின் உல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகியுள்ளது. சீன நல வாழ்வு துறை அமைச்சகத்தின் நோய் கட்டுப்பாட்டுப் பகுதியின் துணை தலைவி பெஃன் யுயெ சியூ இது பற்றி கூறினார்.

சீனாவில் எதிர்பாராத விபத்துக்களால் குழந்தைகள் காயமுற்ற ஏனே மரணமடைந்த நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்கின்றன. இது சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் சீரான வளர்ச்சிக்கு இது தீங்கு விளைவித்துள்ளது மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களுக்கும் கடும் சேதங்களையும் விளைவித்துள்ளது என்றார் அவர்.

விபத்துக்களை எவரும் எதிர்பார்க்க முடியாது என்று முன்பு சீன மக்கள் கருதினர். ஆகவே இதை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் பாதுகாப்பு திட்டப் பணி மற்றும் மருத்துவத்தின் வளர்ச்சியுடன் எதிர்பாராத விபத்துக்களை பயன் தரும் முறையில் தடுக்க முடியும் என்பதை மக்கள் கண்டறிந்தனர். எனவே இது பற்றிய கள ஆய்வையும் ஆராச்சியையும் சில நிபுணர்கள் துவக்கினர்.

அண்மையில் ஐ.நாவின் குழந்தைகள் நல நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் ஆதரவுடன் பெய்சிங் மாநகரின் தொடர்புடைய வாரியம் இது பற்றிய கள ஆய்வை நடத்தியது. கடந்த ஓராண்டில் ஆய்வாளர்கள் சுமார் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு கள ஆய்வு மேற்கொண்டு பல தகவல்களைத் திரட்டியுள்ளனர். சாலை விபத்துக்களும் நீரில் மூழ்கி இறப்பதும் குழந்தைகளுக்கு மரணம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகும். கீழே விழுந்து காயமுறுவதும் விலங்குகளால் கடிக்கப்பட்டு காயமுறுவதும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதற்கு முக்கிய காரணங்களாகும் என்று இக்கள ஆய்வு காட்டுகின்றது.