• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-15 11:19:49    
நேயர் நேரம்74

cri
அடுத்தபடியாக கடலூர் நேயர் கதிர்தாம நாதன் அனுப்பிய சே.கதிர்காமநாதன், 100,காமாட்சிஅம்மன்கோயில்தெரு, கடலூர் துறைமுகம் அன்புடையீர் சீன வானொலி வழங்கும் செய்திகளை நான் தவறாமல் கேட்டு வருகின்றேன். அச்செய்திக்ள சீனாவின் அன்றாட நடப்புகளை தெளிவாக விளக்குவது மட்டுமன்றி உலகின் அன்றாட நடப்புகளையும் விரிவாக அறிந்து கொள்ள உதவுவதாக அமைகின்றது. செய்திகளின் வழி சீனாவின் படிப்படியான முன்னேற்ற நடவடிக்கைகளை விரிவாக அறிந்து கொள்ள இயல்கிறது. குறிப்பாக என்னை கவர்ந்து செய்திகளின் மொழிநடை . செய்திகளை கேட்டேன். அதில் சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இந்தியாவும்,பாகிஸ்தானும் சீனாவின் நட்பு நாடுகள். இருநாடுகளும் தங்களுக்கிடையேயான பிர்ச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என் கருத்து வெளியிட்டது என்னை பெரிதும் கவர்ந்தது. சீனா மனந்திறந்த தனது ஆக்கப்பூர்வான ஆர்வத்தை தெரிவித்துள்ளது. சிறப்புக்குரியது. இருநாடுகளையும் தனது சம்மான நட்பு நாடுகளாக அறிவித்துள்ளது பாராட்டுக்குரியுது. நன்றி கதிர்தாமநாதன். பொதுவாக வானொலி ஒலிபரப்பில் செய்திகளைத்தான கசப்பானது என்று நேயர்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட கசப்பான நிகழ்ச்சியையும் நீங்கள் விரும்பும்படி ஒலிபரப்ப முடியாது. எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது அடுத்து. நம்முடைய முந்தைய நேயர் நேயர் நிகழ்ச்சியை பாராட்டி மின் அஞ்சல் அனுப்பியுள்ளார் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம். (வளவனூர் புதுப்பாளையம் S.செல்வம்) 'நேயர் நேரம்' நிகழ்ச்சி இன்று மிகவும் நன்றாக இருந்தது. எந்தப் பிரச்னையும் இல்லை. இன்றைய நிகழ்ச்சியை சிறப்பான முறையில் தயாரித்து வழங்கிய நண்பர் விஜயலட்சுமி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய நிகழ்ச்சியை யாராலும் குறைகூறவியலாது. பாராட்டுக்கள். முதல் கடிதமாக என்னுடைய கடிதத்தை வாசித்தமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'நேயர்கள்தான் நமக்குச் செல்வம்' எனக்கூறிவிட்டு முதலில் செல்வத்தின் கடிதத்தைப் படிப்போம் எனக் கூறிய முறை; என்னை மிகவும் கவர்ந்தது. மிக்க நன்றி.