சீனாவின் 2005ம் ஆண்டுக்கான வசந்த விழா கலை நிகழ்ச்சிகளில் சீன மக்கள் மிகவும் வரவேற்கப்பட்ட நிகழ்ச்சியானது 《ஆயிரம் கைகளைக் கொண்ட தேவி》எனப்படும் நடனமாகும் நடனக் கலைஞர் தைய் லி குவா தலைமையில் வாய்பேச முடியாத 20 நடிகைகள் இந்த நடனத்தை அரங்கேற்றினர். தைய் லி குவா《மயலின் ஆத்மா》எனும் நடனத்தை ஆடுவதன் மூலம் சீன மக்களிடையே பெரும் புகழ் பெற்றுள்ளார். உலகில் உச்ச நிலை கலை மாளிகைகளான அமெரிக்காவின் நியூயோர்க் கானெச்சி இசை மண்டபம், இத்தாலியின் ஸக்காலா நாடக அரங்கம் ஆகியவற்றில் கலை நிகழ்ச்சி நடத்தியவர் என்ற பெருமை சீனர்களிடையில் அவருக்கு மட்டுமே உண்டு.
சாதாரண மக்களைப் பொருத்தவரை நடனம் ஆடுவது எளிதான விஷ்யம். ஆனால் காது கேளாத வாய் பேச முடியாதவர்களுக்கு இது மிகவும் கடினமானது. ஆடும் போது ஒருங்கிணைந்த முறையில் ஒரே இசைவுடன் ஆட வேண்டும். அப்படியிருக்க உடல் குறையுடன் அவர்கள் எப்படி ஆட முடியும்? பொதுவாக அரங்கேற்றும் போது 4 கை சைகை ஆசிரியர்கள் மேடையின் 4 மூலைகளில் நின்ற வண்ணம் கை சைகை மொழி மூலம் அவர்களுக்கு ஆணையிடுகின்றார்கள். ஆசிரியர்களின் கை சைகை மொழி ஊனமுற்றோரின் நடன இசையாகும். ஆசிரியர்கள் அவர்களின் காதுகளாக செயல்படுகின்றனர்.
இசைவுடன் அழகான சைகைகள் மூலம் அவர்கள் அரங்கேற்றுகின்றனர். வசந்த விழாக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சிகளில் ஒழுங்கான நடன இசையுடனும் அழகான சைகைகளுடனும் அவர்கள் தலைசிறந்த முறையில் கண்பார்வையாளர்களுக்கு 《ஆயிரம் கைகளைக் கொண்ட தேவி》எனப்படும் நடனத்தை அரங்கேற்றினார்கள். 2004ம் ஆண்டு ஏதன்சில் அவர்கள் சீனாவுக்கு ஈட்டிய பெருமை இதை கண்டுரசித்த பார்வையாளர்களின் நினைவுக்கு வந்தது.
சென்ற செப்டெம்பர் திங்கள் ஏதன்ஸில் நடைபெற்ற ஊனமுற்றோர் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் சீனா அனுப்பிய 《ஆயிரம் கைகளை கொண்ட தேவி》எனும் நடனம் உலக மக்களின் கண்களுக்கு விருந்து அளித்துள்ளது.
இது ஊனமுற்றவர்களால் அரங்கேற்றப்பட்டது என்பதை அப்போது யாரிரும் நம்பவில்லை. நடிகைகள் நாடு திரும்பியதும் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியில் இதை அரங்கேற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வந்ததும் அவர்கள் கவலைப்பட்டனர். குறுகிய காலத்தில் நடிகைகளின் உணர்ச்சியை நன்றாக நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் உடல் பயிற்சியில் ஈடுபட துவங்கினர். கடும் குளிர் காற்று அவர்களின் முகத்தில் மோதி அடித்தது. நாள்தோறும் காலையிலிருந்து நள்ளிரவு வரை அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். 2005ம் ஆண்டின் வசந்த விழாக் கொண்டாட்டத்தில் இந்த நடனம் நல்ல வரவேற்பு பெற்றதில் அவர்களின் கடின உழைப்பு நிறைந்துள்ளது.
|