இப்பொழுது, பெய்ஜிங் மாநகர், வசந்த காலத்தில் நுழைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டின் இக்காலத்திலும், வடபகுதியில் வாழும் சீனர்கள் ஒரு வகையான பாரம்பரிய உணவு உண்ண வேண்டும்.
அதன் பெயர் வசந்த காய்கறி ரோ. இதுவே, சில வசந்த காலத்தின் காய்கறிகளின் மாவை வடை போல தட்டி எடுத்து பொரிப்பதுல் ஆகும்.
சீன கட்டுலட் என்றும் சொல்லலாம். முதலில், வசந்த காய்கறி ரோ வறுவல் செய்ய தேவைப்படும் பொருட்கள் சொல்கின்றேன்.
மாவு 400 கிராம்
முட்டை ஒன்று
காளான் 100 கிராம்
வெங்காயம், 200 கிராம்
கேரட், 200 கிராம்
உப்பு 10 கிராம்
எண்ணெய் 200 கிராம்
இனி, வடை தட்டுவதற்கு தேவையான மாவை, முன்கூட்டியே பிசைய வேண்டும்
மாவில் நீரை சேர்த்து, நன்றாக பிசைந்து, 25 நிமிடம் ஊறவிட வேண்டும். பின்பு, பிசைந்த மாவை, 20 கிராம் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். அடுத்து, உருண்டைகளை கையால் வடை போல தனித்தனியாக தட்ட வேண்டும்.
இனி, வடைக்கு உள்ளே வைக்கும் பூரணத்தை எப்படி செய்வது?
காளான், வெங்காயம், கேரட் முதலிய காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கவும். இந்த காய்கறிகளில் உப்பு கலந்து, நன்றாக கிளற வேண்டும்.
அடுத்து, வசந்த காய்கறி ரோ சுருட்டலாம். மாவு வடை ஒன்றில், சில கலந்த காய்கறிகளை வைத்து, அழகாக சுருட்டுங்கள். குறிப்பாக, இரு முனைகளையும் நன்றாக மடித்து வைத்துச் சுருட்ட வேண்டும். இறுதியாக முட்டையின் மஞ்சள் கருவில் தடவி குச்சி போல, காய்கறி ரோவை செய்கின்றோம். பிறகு, இது எண்ணெயில் பொரிக்கப்பட வேண்டுமானால், அகலமாக தட்டவும்.
தமிழர் அடிக்கடி பொரித்த வறுவலை பிரியமாக சாப்பிடுவார்கள். ஆகவே, சீனாவின் வசந்த காய்கறி ரோ கண்டிப்பாக வரவேற்பார்கள்.
இப்பொழுது, அனைத்து காய்கறி ரோக்களையும் சுருட்ட முடிந்தது. இனி, வாணலியில் எண்ணெய் விட்டு, 2 நிமிடம் சுடட்டும். எண்ணெய் கொஞ்சமாக ஊற்றினால், காய்கறி ரோ ஒவ்வொன்றாக எண்ணெயில் போட வேண்டும். ஒரே சீராக வேக வேண்டும் என்பதற்காக, எண்ணெயில் வேகும் போது, காய்கறி ரோ தொடர்ந்து புரட்டிப் போட வேண்டும்.
சுமார் 5 நிமிடம். காய்கறி ரோ தங்க நிறமாக மாறும் போது, எண்ணெயிலிருந்து எடுத்து, தட்டில் போடவும். இப்போது இந்த வறுவல் சுடச்சுட தயார்.
உங்கள் விருப்பம் போல மிளகாய் சாஸ் தொட்டுச் சுவையுங்கள்.
அடுத்த முறை, தும்புலின் தயாரிக்கலாம். ஆகையால், மாவு, முட்டை, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், காளான் முதலியவற்றை முன்கூட்டியே தயாராக எடுத்துவைத்திருங்கள்.
|