• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-22 16:01:08    
கடந்த வாரத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் (1)

cri

அனைத்து பிரிட்டிஷ் பூப்பந்து ஒப்பன் போட்டி மார்ச் 13ஆம் நாள் முடிவடைந்தது.அனைத்து 5 நிகழ்ச்சிகளின் தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. அவற்றில் சீன வீரர் மற்றும் வீராங்கனைகள் 4 தங்கப் பதக்கங்களை வென்றனர். ஆடவருக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில் சீன வீரர்களான சாய் யுன், பூ ஹை பொங் ஜோடி 2-0 என்ற செட் கணக்கில் டென்மார்க் PAASKE/ JONAS RASMUSSN ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. 1991ஆம் ஆண்டுக்குப் பின், அனைத்து பிரிட்டிஷ் ஒப்பன் போட்டியின் இந்த நிகழ்ச்சியில் சீனா சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீரர் சென் ஹொங் தனது அணி தோழரான லின் தானைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம பெற்றார். சீன வீராங்கனை சியே சிங் பாங், மகளிருக்கான ஒற்றையர் சாம்பியன் பட்டம் பெற்றார். சீன வீராங்கனைகளான கௌ லிங், ஹுவாங் சுய் ஜோடி மகளிருக்கான இரட்டையர் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றது.

மராதன் 2005ஆம் ஆண்டு சியோல் சர்வதேச மராதன் எனும் நெடுந்தொலைவு ஓட்டிப் போட்டி மார்ச் 13ஆம் நாள் நடைபெற்றது. சீன வீராங்கனை சோ சுன் சியு 2 மணி, 23 நிமிடம் 24 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டம் பெற்றார். சீனாவின் மற்றொரு வீராங்கனை இரண்டாம் இடம் பெற்றார். கெனியா வீரர் ஒருவர் ஆடவருக்கான சாம்பியன் பட்டம் வென்றார்.

2005ஆம் ஆண்டு சர்வதேச நீச்சல் சம்மேளனம் ஏற்பாடு செய்த நீர் குதிப்பு போட்டியின் மாஸ்கோ சுற்று மார்ச் 13ஆம் நாள் நிறைவடைந்தது. சீன வீரர் சௌ வெய் ஆடவருக்கான பத்து மீட்டர் மேடை நீர் குதிப்பில் சாம்பியன் பட்டம் பெற்றார். ஆடவருக்கான மூன்று மீட்டர் இரட்டையர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பில் சீன வீரர்களான வாங் பெங், ஹொ ச்சுங் ஜோடி இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றது. இந்த போட்டியில் சீன அணி மொத்தம் 6 தங்கப் பதக்கங்களை பெற்றது.

2005ஆம் ஆண்டு குறுகிய பாதை விரைவுப் பனிச்சறுக்கலின் உலக சாம்பியன் பட்டப் போட்டி மார்ச் 13ஆம் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்தது. 500 மீட்டர் பனிச்சறுக்கல் போட்டியில் சீன வீராங்கனைகளான யாங்யாங், வாங் மொங், பு தியன் யு முறையே, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்றனர். ஆடவருக்கான 1000மீட்டர் பனிச்சறுக்கல் போட்டியில் சீன வீரர் லீ ச்சியா ச்சுன் வெண்கல பதக்கம் பெற்றார். இந்த போட்டியில் சீன வீரர்கள் மொத்தம் ஒரு தங்கம் இரண்டு வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களை பெற்றனர்.