
17வது மகளிருக்கான ஆசிய கோப்பை மேசை பந்து போட்டி மார்ச் 13ஆம் நாள் ஜப்பானில் நிறைவடைந்தது. இப்போட்டியில் சீன இளம் வீராங்கனைகளான கோ யன், லியூ சி வென் மட்டும் கலந்துகொண்டனர். இறுதியில் இருவரும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை. சீன ஹாங்காங் வீராங்கனை தியே யா நா இறுதியில் சாம்பியன் பட்டம் பெற்றார்.
2005ஆம் ஆண்டு அமெரிக்க உள்ளரங்க தடகள சாம்பியன் பட்டப் போட்டியில், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்து பல்கலைக்கழக மாணவர் KERRON CLEMENT 44.57 வினாடி என்ற சாதனையுடன் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் 44.63 விநாடி என்ற உலக சாதனையை முறியடித்தார். உலகில் புகழ்பெற்ற நட்சத்திர விளையாட்டு வீரர் MICHAEL JOHNSON இந்த சாதனையை பத்து ஆண்டுகளாக நிலைநிறுத்திவந்தார்.
ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் GABRIEL BATISTUTA கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மார்ச் 13ஆம் நாள் அறிவித்தார். தற்போது 36 வயதான இவர் 1994, 1998, மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டிகளில் கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட 78 சர்வதேச ஆட்டங்களில் மொத்தம் 56 கோல் போட்டு, ஆர்ஜென்டினாவில் முதலிடம் வகிக்கின்றார்.
ALGARVE CUP சர்வதேச மகளிர் கால்பந்து அழைப்புப் போட்டி லீக் பந்தயங்கள் மார்ச் 13ஆம் நாள் நிறைவடைந்தன. சீன அணி 13ஆம் நாள் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மன் அணியிடம் தோல்வி கண்டது. முன்னதாக, நார்வே அணி, சுவீடன் அணி ஆகியவற்றிடம் சீன அணி தோல்வி கண்டது. இதனால் மூன்று ஆட்டங்களிலும் தோல்வி கண்ட சீன அணி, பிரிவின் கடைசி இடம் வகிக்கின்றது. ALGARVE CUP கால்பந்து போட்டி ஒரு உயர்நிலை கால்பந்து பாரம்பரிய போட்டியாகும். ஒரு சிறிய உலக கோப்பைப் போட்டி என இது அழைக்கப்படுகின்றது.
மகளிருக்கான உலக கோப்பை வாள் வீச்சு போட்டியின் இத்தாலி சுற்றின் தனிநபர் போட்டி மார்ச் 12ஆம் நாள் நிறைவடைந்தது. சீன வீராங்கனை சௌ யுவான் யுவான் அரை இறுதிப் போட்டியில் 11-15 என்ற புள்ளிக்கணக்கில் இத்தாலி வீராங்கனை LUCCHINO இடம் தோல்வி கண்டு மூன்றாம் இடம் பெற்றார்.
|