அனைவரின் உடல் நலத்தையும் உத்தரவாதம் செய்வதற்காக, இந்த சூழல் பாதுகாப்பு நடவடிக்கை, கடல் மட்டத்திலிருந்து 5200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சுமுலும்மா சிகரத்தின் அடிவார முகாமில் வரையறைக்கப்படுகிறது. ஆனால் எங்கெங்கும் குப்பை கூளங்கள் காணப்பட்டதால் வரம்புக்குள் வேலையை நிறுத்த தொண்டர்கள் விரும்பவில்லை. அடுத்த நாள், சியு ச்சி வெய், லியு சியாவ் போ உட்பட 5 தொண்டர்கள் ஒரு கிளைக் குழுவை உருவாக்கினர். அடிவார முகாமிலிருந்து புறப்பட்டு, கடல் மட்டத்திலிருந்து 6500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 2வது எண் முகாமை நோக்கி, அவர்கள் முன்னேறினார்கள்.
2வது எண் முகாமில் இருந்த ஆக்சிஜன் அளவு, சமவெளியில் இருந்ததை விட, 40 விழுக்காட்டை எட்டவில்லை. அப்போது அங்கு தட்ப வெப்ப நிலை பூஜியத்துக்குக் கீழ் 20 டிக்ரி செல்ஷியஸ் ஆகும். காற்று பரிமாண அளவில் 7 ஆக இருந்தது. இந்த 5 தொண்டர்கள் அடிவார முகாமிலிருந்து 2வது எண் முகாம் சென்றடைந்த 3 நாட்களில், குளிர், ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் உடல் சக்திக் குறைவு, எதிர்பார்த்த மூச்சுத் திணறல் அனைத்தும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தின. அத்துடன், உணவு பற்றாக்குறை, அவர்கள் எதிர்நோக்கிய கடும் பிரச்சினையாகும். சியு ச்சி வெய் கூறியதாவது—
"பல பொருட்களை கொண்டு செல்வதால், கூடுதலான குப்பை கூளங்கள் ஏற்படக் கூடும். ஒவ்வொரு காலையிலும், காலை சிற்றுண்டி இன்ஸ்டன்ட் காப்பியும் pieயும் மட்டுமே. பகல் உணவாக, நாங்கள் chocolate மற்றும் jellyயைத் தின்று உடல் தேவையை சமாளித்தோம். இரவில், instant noodles நாங்கள் சாப்பிடுகிறோம். எனவே எங்கள் உடல் பலவீனமாக உள்ளது" என்றார் அவர்.
அடிவார முகாம் முதல் 2வது எண் முகாம் வரை, 6 நாட்களில், சியு ச்சி வெய் உட்பட 5 தொண்டர்கள் 2 டன் குப்பை கூளங்களைத் திரட்டினர். ஒவ்வொரு யாக் எருதும் 4, 5 பெரிய குப்பைப் பைகளை சுமந்து கொண்டன. அடிவார முகாமில் தங்கியிருந்த தொண்டர்கள் ஓய்வு எடுக்கவில்லை. 6 நாட்களில் அவர்கள் தேடி திரட்டிய குப்பை கூளங்கள் மலை போல் குவிக்கப்பட்டிருந்தன.
தொண்டர்களின் செயலைக் கண்டு பல சுற்றுலா பயணிகள் ஈர்க்கப்பட்டு, துப்புரவு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் சேர்ந்த இல்ரேல்-அமெரிக்க கூட்டு மலை ஏற்ற அணி ஒன்று குறிப்பிடத்தக்கது. சீனச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொண்டர்கள் கடல் மட்டதிலிருந்து 6000 மீட்டர் உயரத்திலுள்ள இடத்தில் குப்பை கூளங்களை திரட்டியதை அவர்கள் கண்டு, கையின் பெரு விரலை உயர்த்தி, பாராட்டு தெரிவித்தனர். குப்பை வைக்கும் கருவி இல்லாமல் இருந்ததால், சொந்த தூக்கப் பைகளை அவர்கள் பயன்படுத்தி குப்பை கூளங்களை வைத்தனர். சீனச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொண்டர்களின் பணி மகத்தானது. முழு உலகின் ஆதரவை பெற வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
1 2 3
|