• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-21 16:33:44    
நேயர் நேரம்76

cri
மறைமலை நகர் நேயர் சி மல்லிகா தேவி ஒரு பழைய நேயர் ஆகும் அவர் சீன வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டுக் கொள்கிறார். பின்னர் தமது கருத்துகளை தெளிவாக தெரிவிக்கிறார். சீன தேசிய குடும்பம் நிகழ்ச்சி அவருக்கு பிடிக்கும். அவர் கூறியதாவது கடந்த டிசம்பர் திங்கள் 28ம் நாள் கறவை பசுவளர்ப்பு திட்டத்தைப் பற்றஇ தி கலையரசி அவர்கள் கூறியதைக் கேட்டேன். கறவைபசு வளர்ப்பு திட்டத்தை ஆரம்பித்து கறவை பசுவை ஆராய்ந்து கருப்பு வெள்ளை நிறம் கொண்ட பசு அதிகம் பால் தருவதாகவும் சன்சி மாநிலத்தில் கறவை மாடு வாங்கி நல்ல நிலைமையில் உள்ளார் என்ற செய்தியும் முதன்முதலில் என்ற கன்றை ஆசையாக தடவி கொடுத்தார் என்றும் பாலாகவும் லெண்ணெயாகவும் விற்று வளமடைந்த இடையர்களைப் பற்றி கூறியதைக் கேட்டேன் என்கிறார் அவர். அணைத் தோட்டம் நேயர் பி கந்தசாமி சீன் வானொலியின் இணைய தளம் பற்றி தமது கருத்துகளை தெரிவித்தார். 38 அன்னிய மொழிகளிலும் ஊலக மக்கள்களுக்கு இணையதளம் மூலம் வானொலியின் நிகழ்ச்சிகளை தந்து சாதனை படைத்து இருக்கும் சீன வானொலிக்கு எனது முதல் நன்றி தெரிவிக்கிறேன். 160 நாடுகளில் உள்ள 7 கோடியே 60 லட்சம் பேர் சீன வானொலியின் இணைய தளம் பார்த்து பயன் அடைகின்றனர். இதை கேட்ட எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அதே சமயத்தில் சீன வானொலியின் இணைய தளம் வளர்ச்சி கண்டு பெருமைப்படுகிறேன். திரு தமிழ்ச்செல்வம் அவர்களுக்கு இந்த செய்தி தொகுப்பு இன்னும் இணையதள நேயர்களை அதிகமக்கும் என்பது உண்மை. உண்மையில் சீன வானொலி நிலையத்தின் இணைய தளத்துக்கு ஆதரவு அளிக்கும் போருட்டு பல நேயர்கள் கணிணிகளை வாங்கினார்கள். அவர்களுக்கு தமிழ் பிரிவின் பணியாளர்களின் பேரில் நன்றி தெரிவிக்க வேண்டும். சீனாவும் இந்தியாவும் பெரும் மக்கள் தொகை கொள்கின்ற நாடுகளாகும். இப்படித்தான் குடும்ப நல்ல திட்டம் வேண்டியிருக்கிறது. திருச்சி நேயர் சி குருமுர்த்தி கடிதத்தை எழுதி கருத்து தெரிவித்தார். சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் யெற்றுக் கொள்ளும் பெற்றோர்கல் 45 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்பது வரவேற்க்க கூடியது. இதனால் மக்கள் பெருக்கும் குறைவதுக்கு வாய்ப்பு உள்ளது. இதே போல் அனைத்து நாடுகளஉம் கடுமையான சட்டங்களை இயற்றினால் உலகளவில் மக்கள் தொகையை குறைக்க முடியும் என கருதுகிறேன்.