வணக்கம் நேயர்களே, 各位听众, 你们好!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று இரண்டாம் பாடத்தின் மூன்றாம் பகுதியை படிக்கலாம். முதலில், முன்பு படித்தறிந்த உரையாடலை மீண்டும் பார்ப்போம்.
请问, 你叫什么名字?
உங்கள் பெயர் என்ன
我叫李红。
என் பெயர் லீ ஹொங்
你好,李小姐, 认识你我很高兴!
வணக்கம் செல்வி லீ, உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இங்கு, 小姐என்றால் செல்வி என்பது பொருள். பொதுவாக குடும்பப் பெயரை அடுத்து வரும். எடுத்துக்காட்டாக, 李小姐,王小姐。இங்கு லீ, வாங் என்பன குடும்பப் பெயராகும். 认识என்றால் சந்திப்பது, அல்லது தெரிவது 高兴 என்றால் மகிழ்ச்சி என்பது பொருள்.
இப்பொழுது இந்த உரையாடலை மீண்டும் கேளுங்கள்.
அடுத்து, ஒரு புதிய வாக்கியத்தைப் படிப்போம்.
您做什么工作?
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
இங்கு, 做என்றால் செய் என்பது பொருள், 工作என்றால் வேலை என்பது பொருள். சீன மொழியில், சில சொற்களின் உச்சரிப்பு ஒன்றுபோல இருக்கும். ஆனால், பொருள் வேறுபடும், எடுத்துக்காட்டாக, 做工作என்ற வாக்கியத்திலுள்ள 做 என்ற சொல்லின் பொருள், செய் என்பதாகும். ஆனால், 坐汽车என்ற வார்த்தையிலுள்ள 做என்ற சொல்லின் பொருள் அமர்வது என்பதாகும், பேருந்தில் அமர்வது அதாவது பேருந்து மூலம்.
இப்பொழுது இந்த வாக்கியத்தை எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.
你做什么工作?
அடுத்து, இன்னொரு வாக்கியம்
您在哪儿工作?
நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?
இந்த வாக்கியத்தில் 在哪儿 என்ற சொல்லின் பொருள், எங்கே என்பதாகும். இந்த வாக்கியத்தை வேறு விதமாகவும் கூறலாம். அதாவது. 您在什么地方工作? இங்கு, 什么地方என்றால் எந்த இடத்தில் என்பது பொருள். 在哪儿என்பதற்கும் 什么地方 என்பதற்கும் ஒரே பொருள் தான்.
இப்பொழுது இந்த வாக்கியத்தை எங்களுடன் சேர்ந்து படியுங்கள். நேயர்களே, இன்று இரண்டு புதிய வாக்கியங்களை நாம் படித்தோம். உங்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகின்றேன். அதிக முறை பயிற்சி செய்யுங்கள். ஏதாவது புரியவில்லை என்றால் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். அடுத்த முறை மீண்டும் விளக்கிக் கூறுவேன்.
|