வி---------கடிதங்கள், மின்னஞ்சல் தொலைபேசி ஆகியவற்றின் மூலம் எங்களுடன் தொடர்பு கொண்டு, எமது நிகழ்ச்சிகள் பற்றி கருத்துத் தெரிவிக்கும் அன்பான நேயர்கள் அனைவரையும் நேயர் நேரத்திற்கு வரவேற்கிறோம்.
ரா----------ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்ற பழமொழி கூறி, சீன ஒலிபரப்பாளர்களின் தமிழ்ப்பற்றை பாராட்டுகிறார். பெருநாழி நேயர் எம் முத்துப்பாண்டியன் தற்போது தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வடமொழிப் பெயர்களை ஆர்வத்துடன் சூட்டும் போது, இந்த வேதனையான சூழலில் தாங்கள் சீனப் பெயர்களை விட்டு எங்களுடைய தமிழ்ப்பெயர்களை வைத்திருப்பது எனக்கு இந்தப் பழமொழியை நினைவுபடுத்துகிறது. அயல் மொழியான தமிழை சீனர்கள் போட்டிபோட்டு வளர்ப்பதால், சீனமொழி உலகில் அதிகமான மக்கள் பேசும் மொழியாக உள்ளது என்கிறார் பெருநாழிமா. முத்துப்பாண்டியன் மேலும் அறிவியல் கனல தொடர்பான நிகழ்ச்சிகலை அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டு கோளையும் வைக்கிறார்.
வி------தமிழ்மொழி எங்களுக்கு ஒரு கருத்துச் சொல்ல உதவும் வாசனம் . தமிழ் மக்களுடன் எங்களுக்கு உள்ள பாசப் பிணைப்பைக் காட்ட தமிழ்ப் பெயர் வைத்துள்ளோம். பாராட்டுக்கு நன்றஇ. உங்கள் வேண்டுகோளை கவனத்தில் கொள்கிறோம். நன்றி.
ரா-------பெயர் என்றதும் நினைவுக்கு வருகிறது. சில நேயர்கள் தங்களுடைய ஊரும் பெயரும் முழுவதுமாகச் சொல்லப்படவில்லை என்று குறை சொல்கிறார்கள்.
வி-----அப்படியா
ரா-----ஆமாம். பாத்திமா நகர் S R D பாலஸசுப்பிரமணியம் தமது கடிதம் வாசிக்கப்பட்ட போது பாத்திமா நகர் நிடுபட்டுப் போனதே என்கிறார். எனது பெயர் கி பிரபாசரன் அதை ஏன் மாற்றஇ வாசிக்கிறீர்கள் என்று கேட்கிறார். கருப்பட்டி நேயர் கி பிரபாகரன்.
வி------குறையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி தவறு நிகழாமல் மாரித்துக் கொள்கிறோம். அடுத்து
ரா-------கருப்பட்டி நேயர்சி பிரபாகரன் நரம் ஒலிபரப்பும் இனிய உதயம் நாவல் தொடர் நிகழ்ச்சியைப் பாராட்டியுள்ளார். இது ஒரு இணிய உதயம் தான் இதே போல சேர சோழ பாண்டிய மன்னர்கள் போல் புகழ்பெற்ற சீனமன்னர்கள் பற்றிய வரலாற்று நாவல்களைதொடராக ஒலிபரப்பலாம் என்கிறார். மேலும் இராதாராம் அவர்கள் கதையை வாசிக்கும் போது சாரல் போல செய்தியின் சாயல் தெரிகிறதே. ஒரு வேளை என் மூளையில் இருந்து ஏழேகால் மணி செய்தி அறிக்கையின் ஒலி அகலமறுக்கிறதோ என்று பிரபாகரன் கூறுகிறார்.
|