• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-25 20:25:43    
பிரபலமான தாம்புரின்

cri
சீனாவின் பிரபலமான உணவு தாம்புரின்.

இதை வீன சமோசா என்று சொல்லலாம். ஆனால் செய்முறையில் வித்தியாசம் உள்ளது.

தாம்புரின் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களைச் சொல்லுங்கள்.

மாவு 300 கிராம்

கோழி இறைச்சி, 200 கிராம்

முட்டை இரண்டு

காளான் 100 கிராம்

பச்சை மிளகாய், 150 கிராம்

மிளகாய் வற்றல், 150 கிராம்

உப்பு, 10 கிராம்

எண்ணெய், 20 கிராம்

முதலில், தாம்புரினுக்கு உள்ளே வைக்க கொத்துக் கறித் தயாரிக்க வேண்டும்.

கொத்துக் கறியைத் தயாரிக்கும் முன்பு, முட்டையை நன்றாக அடித்து, வாணலியில் விட்டு வடைபோல வேக விட வேண்டும். பிறகு, முட்டை வடை, காளான், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக பொடிப்பொடியாக ஒறுக்கி வைக்க வேண்டும். இதில், கோழிகொத்துக் கறியைச் சேர்த்து நன்றாக கிளறிய பின், குச்சிகள் அப்படியே இருக்க விட வேண்டும்.

இதன் தயாரிப்பு முறை, கடந்த நிகழ்ச்சியில் வசந்த காய்கறி ரோ தயாரிப்பதைப் போன்றது. மாவில் நீரை சேர்த்து, நன்றாக பிசைந்து, 25 நிமிடம் ஊறவிட வேண்டும். பின்பு, பிசைந்த மாவை, 20 கிராம் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். அடுத்து, உருண்டைகளை கையால் வடை போல தனித்தனியாக தட்ட வேண்டும்.

மாவு வடை ஒன்றில், சில கொத்துக்கறிகளை வைத்து, நன்றாக மடித்து மூட வேண்டும்.

இது இந்தியாவின் தாம்புரினை விட வேறுப்பட்டது. அழகாக உருவாகி விட்டது.

கடைசியாக, தாம்புரின்களை, வாணலியில் நீர் விட்டு, 8 நிமிடம் நீராவியில் வேகவிட வைக்க வேண்டும். சுவையான இந்த உணவு, சீன மக்களுக்கு மிகவும் விருப்பமான பாரம்பரிய உணவாகும்.

இந்தியாவின் சமோசாவுக்கும் சீனாவின் தாம்புரினுக்கும் இடையே இரண்டு வித்தியாசங்கள். ஒன்று, சமோசாவில் உருளைக்கிழங்கு அல்லது இறைச்சி மட்டும் இருக்கும். தாம்புரினுக்கு உள்ளே பலவகை காய்கறிகளும் முட்டையும் கோழிக்கறியும் வைக்கப்படுகிறது. இன்னொரு வித்தியாசம், இந்தியாவில் சமோசா எண்ணெய்க் குளியல் எடுக்கும். அதாவது கொதிக்கும் எண்ணெயில் போட்டு, 5 நிமிடங்களாவது வேக விடுகிறார்கள். இதனால், சமோசா முழுக்க எண்ணெய். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?அதிகமாக எண்ணெய் சேர்த்தால் இதய ரத்த நாளத்தில் கொலஸ்ரால் என்ற கொழுப்புச்சத்து சேரும் சீனாவின் தாம்புரினில் எண்ணெய் குறைவாகச் சேர்க்கப்படுகிறது. அப்புறம், இட்லி போல நீராவியில் வேக விடப்படுகிறது. ஆகவே உடல் ஆரோக்கியத்திற்கு இது நல்லது.

அடுத்த வாரம், நாள் ஒரு உணவு சொல்கிறேன். சமீபத்தில் காய்கறிச் சந்தைக்குப் போய் சைகை மொழி பேசி காய் வாங்கித் திரும்பும் போது வழியில், இந்திய பரோட்டா போல ஒன்றை சுட்டு விற்றார்கள். வாங்கித் தின்றேன். ஒரு யுவான் நன்றாக இருந்தது.