• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-28 14:26:07    
விளையாட்டுச் செய்திகள் (1)

cri

நியூசிலாந்தின் கூடைப் பந்து அணியின் பயற்சியாளர் மேர் சீனத் தேசிய கூடைப் பந்து அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்பார் என்று சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத்தின் கூடைப் பந்து மையம், மார்ச் 16ஆம் நாள் அதிகாரபூர்வமாக அறிவித்தது. சீன மகளிர் கூடைப் பந்து வரலாற்றில் வெளிநாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மேர் 18ஆம் நாள் பெய்சிங் வந்தடைந்தார். தமது தலைமையில் 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன அணி மனநிறைவு தரும் வகையில் சாதனை நிகழ்த்தும் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு என்று அவர் கூறினார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி மார்ச் 20ஆம் நாள் பிரான்ஸில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்ட சாம்பியன் பட்டப் போட்டியில், சீனாவின் தொங் சன் அணியைச் சேர்ந்த வீரர் லீ செங் பெங் ஓட்டிய 26வது மோட்டார் சைகிள், 30 நிமிடம் 14.908 வினாடி என்ற நேரத்தில் கடந்து 12ஆம் இடம் பெற்றார். சீன வீரர் ஒருவர் இந்த போட்டியில் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.

ஜிம்னாஸ்டிக்ஸ் மார்ச் 19ஆம் நாள் நடைபெற்ற உலக கோப்பைக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் ஜெர்மன் சுற்றில், மகளிருக்கான சமநிலையற்ற கம்பிகள் போட்டியில், சீன வீராங்கனை பான்யே சாம்பியன் பட்டம் பெற்றதை அடுத்து, ஆடவருக்கான horse vaulting போட்டியில், சீன வீரர் லு பின் 9.731 என்ற புள்ளியைப் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். இந்த சுற்றில் சீன அணியின் 5 விளையாட்டு வீரர்கள் மொத்தம் 2 தங்கம் மற்றும் 3 வெண்கல பதக்கம் பெற்றனர்.

பூப்பந்து 9வது சூதிமன் கோப்பைக்கான உலக பூப்பந்து குழு போட்டி, மே திங்கள் 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறும். சீன அணியும் பூப்பந்து விளையாட்டில் வலு நாடான இந்தோனேசியாவும் பி பிரிவில் மோதும். இந்த போட்டி உலகில் உச்ச நிலை பூப்பந்து குழு போட்டியாகும். ஆண் பெண் ஒற்றையர் போட்டி, ஆண், பெண் இரட்டையர் போட்டி, ஆண் பெண் கலப்புப் போட்டி, ஆகிய 5 வகை போட்டிகள் அடங்கும். சீனாவில் நடைபெறுவது இது முதல் முறையாகும். வரலாற்றில் சீனா நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்றிருந்தது.

பனிச்சறுக்கல் 2005ஆம் ஆண்டு உலக இசை நடன பனிச்சறுக்கல் போட்டி, மார்ச் 20 ஆம் நாள் நிறைவடைந்தது. ரஷிய அணி மூன்று தங்கப் பதக்கம் பெற்றது. சீன வீராங்கனை சாங் டன்வீரர் சாங் ஹௌ ஜோடி இரட்டையர் பனிச்சறுக்கலில் வெண்கல பதக்கம் பெற்றது.