• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-31 16:30:41    
விளையாட்டுச் செய்திகள் (2)

cri

2005ஆம் ஆண்டு லௌரன்ஸ் சாம்பியன் பரிசுக்காக, சீனாவின் பத்து தலைசிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். புகழ் பெற்ற தடை ஓட்டப் போட்டி வீரர் லியூ சியாங் தலைசிறந்த ஆடவர் விளையாட்டு வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேசை பந்தாட்ட வீராங்கனை சாங் யீ நிங் தலைசிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குறியைச் சுடும் துப்பாக்கி வீரர் சூ ச்சி நான், தடகள வீராங்கனை சிங் குய் நா,டென்னிஸ் வீராங்கனைகள் லீ திங், சுன் தியன் தியன், சீன மகளிர் கைப் பந்து அணி, மகளிர் கைப் பந்து அணியின் பயிற்சியாளர் சென் சுங் ஹொ, புகழ் பெற்ற நீச்சல் வீராங்கனை லோ சுய் ச்சுவன், சர்வதேச சதுரங்க விளையாட்டு மாஸ்டர் சியே ஜுன், அரசு விளையாட்டு நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் யுவான் வெய் மின் ஆகியோரும் பரிசு பெற்றுள்ளனர்.

இவ்வாண்டு செப்டம்பர் திங்கள் முதல், அடுத்த ஆண்டு ஏப்ரல் திங்களில் நடைபெறும் ஏ 1 சர்வதேச கார் ஓட்டப் போட்டியில், சீன கார் ஓட்ட வீரர்கள் கலந்துகொள்ள போவதாக சீன கார் பந்தய சம்மேளனம் மார்ச் 19ஆம் நாள் அறிவித்தது. அமெரிக்கா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட 24 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கார் ஓட்ட வீரர்கள் போட்டியில் கலந்துகொள்வதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

F 1 சாம்பியன் பட்டப் போட்டியின் ஷாங்கை சுற்று போட்டி நடத்தப்படுவதுடன், கார் ஓட்ட விளையாட்டு, சீனாவில் ஓங்கி வளர்ந்துவருகின்றது. A1 போட்டிக்காக, சீனா அணியை உருவாக்குவதால் சீனாவின் தலைசிறந்த கார் ஓட்ட வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள, மேலும் கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கும். சீனாவின் கார் பந்தய விளையாட்டு வளர்வதற்கு இது நல்லது.

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவதாக ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் பெகன் போர், அண்மையில் தெரிவித்தார். தற்போது, ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு பெகன் போர், பிரான்ஸின் புகழ் பெற்ற கால்பந்து வீரர் பிலதினி ஆகிய இருவருக்கும் உண்டு என்று கருதப்படுகின்றது

2005ஆம் ஆண்டு பெய்சிங் வசந்த கால நெடுந்தூர ஓட்டப் போட்டியும் 11வது பெய்சிங் சர்வதேச நெடுந்தூர ஓட்ட விழாவும் மார்ச் திங்களின் பிற்பாதியில் நடைபெறும். இந்த போட்டி 1956ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை 41 முறை நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டி, ஜப்பான், ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 48 விளையாட்டு வீரர்களை ஈர்த்துள்ளது. 5 கிலோமீட்டர் ஓட்டம், 10 கிலோமீட்டர் ஓட்டம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகள் இப்போட்டியில் அடங்கும்.