கடந்த ஆண்டு சீனாவின் ஆழ் கடல் மீன்பிடித்தொழிலில் மொத்தம் 12 லட்சத்து 50 ஆயிரம் டன் எடை அளவுக்கு மீன்பிடிப்பு நிகழ்ந்துள்ளது. அதன் உற்பத்தி மதிப்பு, சுமார் ஆயிரம் கோடி யுவானாகும். சீன வேளாண் அமைச்சகத்தின் மீன்பிடித் தொழில் பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் இன்று பெய்ஜிங்கில் இதை தெரிவித்தார். ஆழ் கடல் மீன்பிடி தொழில் வளர்ச்சியடைந்த கடந்த 20 ஆண்டுகளில், சீனா, தொடர்புடைய நாடுகளுடன் விரிவான முறையில் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் நடத்தியுள்ளது. ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டின் மூலம் கப்பல் துறை, குளிர்ப்பதன கிடங்கு, பதனீட்டு ஆலை முதலியவற்றை அமைத்து, உள்ளூர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவதையும் பொருளாதார வளர்ச்சியையும் விரைவுபடுத்தியுள்ளது என்று இப்பொறுப்பாளர் குறிப்பிட்டார். தற்போது சீனாவின் 90 தொழில் நிறுவனங்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றன. 1700 ஆழ்க்கடல் மீன்பிடி கப்பல்கள் இயங்குகின்றன என்று தெரிய வருகின்றது.
|