• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-29 15:56:38    
இயற்கையோடு இசைந்த வாழ்க்கை

cri

மனிதன் பண்டைக் காலத்தில் இருந்தே இயற்கையோடு இசைந்த வாழ்க்கை நடத்தி வந்தான். இயற்கையைப் போற்றினான் வழிபட்டான். எந்திரங்கள் வந்ததும் மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராடி அதை அடக்க முற்பட்டான். மனிதன் இயற்கையை அடக்க முயற்சிக்கும் போது இயற்கை மனிதனை விழுங்க முயற்சிக்கின்றது. அண்மையில் சீனாவில் HE ZUO XIU என்ற அறிவியல் அறிஞரும் LIANG CON JIE என்ற இயற்கை ஆதரவாளரும் ஒரு விவாதம் நடத்தின்ர். அதன் அடிப்படையில் ஒரு உரையாடலை இன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் ராஜராம் தயாரத்து வழங்குகிறார். உடன் பங்கேற்பவர் கலையரசி. இயற்கையா? மனிதனின் சுயநலமா?- எது முக்கியம்? உரையாடல் கேளுங்கள்

கலை........மனிதர்கள் இயற்கையை மதிக்க வேண்டும். இயற்கையிடம் அஞ்ச வேண்டும்.

ராஜா........உண்மைதான். மனிதர்கள் இயற்கையோடு தங்களுக்கு உள்ள உறவு பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்த வேண்டும். இயற்கையோடு இசைந்த வாழ்க்கையை மனிதன் நடத்தாவிட்டால் அண்மையில் நிகழ்ந்த கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படத்தான் செய்யும்.

கலை........இயற்கையின் சட்டம் என்ன தெரியுமா?அளவுக்கு மீறி அதைச் சுரண்டினால் இயற்கை உங்களை விழுங்கிவிடும். மனித குலத்தை இயற்கை பழிவாங்கத் தொடங்கினால் கடைசியில் இந்த உலகத்தில் உயிரினம் எதுவுமே மிஞ்சி இருக்காது. இதுதான் நமக்கு சுனாமி தந்த படிப்பினை. ஆகவே மனிதன் இயற்கையைத் தொடாமல் இயற்கையோடு விளையாடாமல் இருப்பதே நல்லது.

ராஜா........இதை ஒப்புக் கொள்ளமாட்டேன். இயற்கை மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரம். மனிதன் தனது வாழ்க்கை மேம்படுவதற்கு இயற்கையை பயன்படுத்துவதில் தவறில்லை. இதற்கு உறுதுணையாக அறிவியலும் தொழில் நுட்பங்களும் உள்ளன.

கலை........முன்பு எல்லாம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத காரணத்தால் அல்லது அது பற்றிய அறிவு குறைவாக இருந்தததால் இயற்கையை மாற்ற மக்களால் முடியவில்லை. இன்றோ மனிதன் அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் தனது பிடிக்குள் எடுத்துக் கொண்டு விட்டான். இதனால் இயற்கை மீது மாற்ற முடியாத ஒரு தாக்கம் ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. அறிவியல் தொழில் நுட்பத்தின் பலன்களை மக்கள் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டாமா? உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? அண்மையில் பொங் பின் என்ற இயற்கை பாதுகாப்புத் தொண்டா ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதாவது இந்த பூமியிலே பல உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றிலே மனிதனும் ஒன்று. அவ்வளவுதான் மற்ற உயிரினங்கள் எல்லாம் சுமார் 4600 கோடி ஆண்டுகளாக பூமியில் இருக்கும் போது மனிதனின் இருப்போ 60 லட்சம் ஆண்டுகள் தான். இப்படி இருக்கும் போது மற்ற உயிரினங்களை பலி கொடுத்துவிட்டு தான் மட்டும் வாழணும் என்று மனிதன் நினைப்பது சுயநலம் இல்லையா?

ராஜா........அதற்காக இயற்கையைத் தொடாதே என்று சொல்வதா? தொடக்க காலத்தில் இயற்கை சக்திகளிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் ஆற்றலை மனிதன் பெற்றிருக்க வில்லை. அல்லது அவனிடம் இந்தப் பாதுகாப்பு ஆற்றல் ஒரு வரம்புக்கு உட்பட்டே இருந்தது. இப்போது தீவிரமான அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் இயற்கையை எதிர்த்துப் போராடுவதிலும் இயற்கையை தனது வழிக்குக் கொண்டு வருவதிலும் மனிதனுடைய ஆற்றலும் உயர்ந்து விட்டது. மேலும் இயற்கையினால் உண்டாகும் பேரழிவுகளைக் கட்டுப்படுத்தவும் சில வேளைகளில் இயற்கைச் சீற்றம் ஏற்படாமல் தடுக்கவும் மனிதன் தெரிந்து கொண்டான்.