வணக்கம் நேயர்களே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று இரண்டாம் பாதத்தின் நான்காம் பகுதியை படிக்கின்றோம்.
முதலில் கடந்த முறை படித்தறிந்த இரண்டாடு வாக்கியங்களை மீண்டும் பார்ப்போம்.
您做什么工作?
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
இங்கு, 做 என்றால் செய் என்பது பொருள், 工作என்றால் வேலை என்பது பொருள். சீன மொழியில், சில சொற்களின் உச்சரிப்பு ஒன்றுபோல இருக்கும். ஆனால் பொருள் வேறுபடும். எடுத்துக்காட்டாக, 做工作 என்ற வாக்கியத்திலுள்ள 做என்ற சொல்லின் பொருள், செய் என்பதாகும். ஆனால், 坐汽车என்ற வார்த்தையிலுள்ள 坐என்ற சொல்லின் பொருள், அமர்வது என்பதாகும், பேருந்தில் அமர்வது அதாவது பேருந்து மூலம்.
இப்பொழது இந்த வாக்கியத்தை எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.
您做什么工作?
அடுத்து இன்னொரு வாக்கியம்.
您在哪儿工作?
நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்
இந்த வாக்கியத்திலுள்ள 再哪儿என்ற சொல்லின் பொருள், எங்கே என்பதாகும். இந்த வாக்கியத்தை வேறு விதமாகவும் கூறலாம். அதாவது您在什么地方工作? இங்கு 什么地方 என்றால் எந்த இடத்தில் என்பது பொருள். 在哪儿 என்பதற்கும் 在什么地方என்பதற்கும் ஒரே பொருள் தான்.
இப்பொழுது இந்த வாக்கி.த்தை எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.
இப்பொழுது ஒரு உரையாடலை பார்க்கலாம்.
A: 请问, 您做什么工作?
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்
B: 我是老师. அல்லது 我是教师.
நான் ஒரு ஆசிரியர். அதாவது நான் ஒரு ஆசிரியராக வேலை செய்கின்றேன்.
இங்கு 老师 என்றால், ஆசிரியர் என்பது பொருள். 老师என்ற சொல் 教师 என்றும் சொல்லலாம். இந்த இரண்டு சொல் ஒரே பொருள். சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ந் நாள் ஆசிரியர் நாளாகும். அதாவது ஆசிரியர் விழா நாளாகும்.
இப்பொழுது என்னுடடன் சேர்ந்து இந்த உரையாடலை படியுங்கள்.
நேயர்களே, இன்று நாங்கள் ஒரு உரையாடலை படித்தோம். உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகின்றேன். அதிகமாக பயிற்சி செய்யுங்கள். ஏதாவது புரியவில்லை என்றால் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். அடுத்த முறை மீண்டும் விளக்கிக் கூறுவேன். நீங்கள் பயிற்சி செய்யும் பொது, முதலாவது பாடத்தை அடிக்கடி திரும்ப திரும்ப படியுங்கள், இல்லை என்றால் நாங்கள் புதியதை படிக்கும் பொது, பழையதை மறந்துவிடுவீர்கள் அல்லவா. சரி இன்றைய பாடம் இதுவரை. வணக்கம் 再见.
|