• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-31 13:41:48    
தொலைதூர கிழக்கு, மத்தியக் கிழக்கு மற்றும் நெருங்கிய கிழக்கு

cri
அண்மை வரலாற்றில் நிகழ்ந்த பல போர்கள் மத்திய மற்றும் தொலை தூர கிழக்குடன் தொடர்புடையவை. தொலை தூர கிழக்கு, மத்தியக் கிழக்கு மற்றும் நெருங்கிய கிழக்கு என்றால் என்ன என்று சீனாவின் நின்சியா மாநிலத்தின் நேயர் வான் பன் கேட்கின்றார். பதில்.....இந்த அரசியல் நிலவியல் கருத்து ஐரோப்பாவின் மைய தத்துவத்தின் விளைவாகும். 14ம் 15ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவத்தின் உற்பத்தி உறவு முதன் முதலில் ஐரோப்பாவில் தான் தோன்றியது. போர்த்துக்கல், ஸ்பெயின், நெதர்லாந் முதலிய அட்லாண்டிக்மாக் கடல் முதல் வட கடல் வரையான ஐரோப்பிய பிரதேசங்களில் உள்ள சில நாடுகள் அதன் பிரதேசத்தை தாண்டி காலனி ஆதிக்கத்தை வெளியே விரிவாக்கிய போது செழுமையான கீழை நாடுகளைசட் சுரண்டியே செல்வும் ஈட்டும் முதல் இலக்காக மாற்றிவிட்டன. 16ம் 17ம் நூற்றாண்டுகளின் முதல் ஐரோப்பிய முதலாளித்துவ சக்திகள் கீழை நாடுகளை நோக்கி முன்னேறின. அப்போது அறியப்பட்ட நிலவியல் அளவையின் படி தொலை தூரமாகவும் நெருங்கியதாகவும் கீழைப் பிரதேசத்தை பிரித்து தொலைதூர கிழக்கு, மத்தியக் கிழக்கு நெருங்கிய கிழக்கு என பெயர் சூட்டின. அதைத் தொடர்ந்து இந்த மூன்று வரையறைகளும் சர்வதேச சமூகத்தினால் பின்பற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகள் வெவ்வேறு முறைகளில் வரையறை செய்தந. இதன் காரணமாக இந்த தெளிவான எல்லை கோடு எதுவும் மோடம்படவில்லை. பொதுவாக கூறினால், தொலை தூர கிழக்கு மேற்கு ஐரோப்பாவை தாண்டி உள்ள ஆசியாவின் கிழக்கு பிரதேசமாகும். சீனா, வட கொரியா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் ரஷியாவின் பசிபிக் கடல் பகுதி இந்த பிரதேசத்தில் சேர்ந்துள்ளன. சில வேளையில் பல்வேறு தென் கிழக்காசிய நாடுகளும் தொலை தூர கிழக்கில் சேர்க்கப்படுகின்றன. மத்தியக் கிழக்கு என்று அடிக்கடி குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இது பற்றி மக்கள் வெவ்வேறு முறையில் குறிப்பிடுகின்றனர். முன்னர் மத்தியக் கிழக்கு என்றால் ஈரான், ஆப்கான் பற்றியே குறிப்பிடம்பட்டது. பின் அதன் அளவு விரிவாக்கப்பட்டது. தற்போது கவியியல் வட்டாரத்தில் மத்தியக் கிழக்கு இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றது. ஒன்று மத்தியக் கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா ஐரோப்பா ஆகியவை இணையும் சந்திப்பில் உள்ள மேற்கு ஆசிய மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகள் பிரதேசங்கள் ஆகியவையாகும். இதில் ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட வில்லை. இன்னொன்று, ஆப்கான, ஆப்பிரிக்காவில் உள்ள அட்லாந்திக் கடலோரத்தில் உள்ள மொராக்கோ, மௌரிட்டானியா, துருக்கி, அரபு தீபகற்பத்தின் தென் பகுதிப் பிரதேசம் ஆகியவை மத்திய கிழக்கில் சேர்க்கப்படுகின்றன. மத்திய கிழக்கில் மொத்தம 22 நாடுகள் உள்ளன. அவற்றின் நிலபரப்பு 1 கோடியே 50 லட்சம் சதுர கிலோமீட்டராகும். அதன் மக்கள் தொகை 30 கோடியை தாண்டுகின்றது. மத்தியக் கிழக்கு பிரதேசத்தில் உள்ள நாடுகளில் வாழ்கின்ற மக்களில் பெரும்பாலோர் அரபு இனத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகின்றனர். ஆகவே மத்தியக் கிழக்கு பற்றி குறிப்பிடும் போது அரபு நாடுகளை இஸ்லாமிய நாடுகளுடன் இணைத்து குறிக்கின்றோம். நெருங்கிய கிழக்கு என்பது மேற்கு ஐரோப்பாவுடன் இணைந்த நாடுகளாகும். பால்கன் நாடுகள் மத்திய தரை கடலோரத்திலுள்ள நாடுகள் கிழக்கு மத்திய தரை கடல் தீவுகள் ஆகியவை முன்பு குறிப்பாக குறிப்பிடப்பட்டன. முதலாவது உலக போருக்கு பிறகு பால்கன் நாடுகள் நெருங்கிய கிழக்கு நாடுகளாக குறிப்பிடப்பட வில்லை. தற்போது உலகில் நெருங்கிய கிழக்கு என்பது மிகமிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றது.